Enemy Teaser: நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும்  ஆர்யா, விஷால் இருவரும் இணைந்து நடித்து வரும் "எனிமி" (Enemy) படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. இதற்கு முன்னதாக பாலா இயக்கத்தில் "அவன் இவன்" படத்தில் ஆர்யா, விஷால் இருவரும் இணைந்து நடித்திருப்பார்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அரிமா நம்பி, இருமுகன், நோட்டா போன்ற படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் எனிமி (Enemy) படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஷாலுக்கு (Vishal) ஜோடியாக மிருணாளினியும், ஆர்யாவுக்கு (Arya) ஜோடியாக மம்தா மோகன்தாஸும் நடித்துள்ளனர்.


இப்படத்திற்கு எஸ்.எஸ்.தமன் இசையமைத்துள்ளார். எனிமி ஆர்யாவின் 32-வது படம் என்றாலும், இது விஷாலின் 30-வது படம் என்பது குறிப்பிடத்தகத்து.


இப்படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு நிறைவடைந்தது. இந்த தகவலை நடிகர் விஷால் தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்து இருந்தார். தற்போது படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் படம் வெளியாக உள்ளது. 


இந்நிலையில், தற்போது எனிமி படத்தின் டீசர் மூன்று மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ளது.


 



உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR