பற்றி எரியும் சர்ச்சைப் பதிவு: ஷாருக்கானை சீண்டுகிறாரா அட்லி?!
இயக்குநர் அட்லி வெளியிட்டுள்ள இன்ஸ்டகிராம் பதிவொன்று சினிமா வட்டாரத்தில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குநர் அட்லி வெளியிட்டுள்ள இன்ஸ்டகிராம் பதிவொன்று சினிமா வட்டாரத்தில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக இருந்து ராஜா ராணி படம் வாயிலாக இயக்குநராக அறிமுகம் ஆனவர் அட்லி. உச்ச நடிகர்களுள் ஒருவரான விஜய்யை வைத்து தெறி, மெர்சல் மற்றும் பிகில் ஆகிய படங்களை இயக்கியதால் கோலிவுட்டில் தனிக் கவனத்தை ஈர்த்தார் அட்லி. இதனிடையே பாலிவுட்டிலும் காலடி எடுத்து வைக்க பிளான் செய்த அவர், தனது முதல் படமாக நடிகர் ஷாருக்கானை வைத்து படம் இயக்கத் திட்டமிட்டார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே இதற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கின.
மேலும் படிக்க| மனைவியுடன் சேர்ந்து அட்லீ செய்த காரியம், வைரலாகும் வீடியோ
கொரோனா மற்றும் ஷாருக்கானின் சொந்தப் பிரச்சினைகள் உள்ளிட்ட சில காரணங்களால் அட்லியின் படப்பிடிப்பு தாமதமாவதாக ஒறுபுறம் கூறப்படுகிறது. இன்னொரு புறமோ, படத்தின் சில காட்சிகளை ஷாருக்கான் மாற்றியமைக்கக் கூறியதாகவும் அட்லி அதற்கு ஒத்துக்கொள்ளாததால் படத்தைக் கைவிட ஷாருக் கான் முடிவுசெய்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இப்படியாக பல்வேறு தகவல்கள் உலா வருவதால் இப்படம் அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்லுமா அல்லது கைவிடப்படுமா எனத் தெரியாத சூழல் இருந்துவருகிறது.
இந்நிலையில், தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் இயக்குநர் அட்லி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், குத்துச் சண்டை வீரர் மைக் டைசனின் புகைப்படத்தை இணைத்துள்ள அவர், “உங்களைத் தவறாக வழிநடத்தியவர்கள் அதற்காக வருத்தப்படும் காலம் ஒன்று உங்களது வாழ்க்கையில் வரும்” எனக் குறிப்பிடும் தொனியில் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவுதான் தற்போது திரை வட்டாரத்தில் புதிய புயலைக் கிளப்பியுள்ளது. யாரை மனதில் வைத்து அட்லி இந்தப் பதிவை வெளியிட்டுள்ளார் எனும் விவாதமும் கிளம்பியுள்ளது.
மேலும் படிக்க| ஷாருக்கான் படத்தில் நடிக்கவிருக்கும் விஜய்!
அந்த வகையில், ஷாருக்கானுடனான படம் கைவிடப்பட்டதாகச் சொல்லப்படும் தகவலை நம்பவேண்டாம் என ரசிகர்களுக்கு மறைமுகமாக சொல்லும் விதமாக அட்லி இந்தப் பதிவை வெளியிட்டுள்ளார் என ஒரு தரப்பு கூறிவருகிறது. மற்றொரு தரப்போ, ஒரு சிலரின் பேச்சைக் கேட்டே ஷாருக்கான் இந்தப் படத்திலிருந்து விலகியுள்ளதாகவும் அதை சுட்டிக்காட்டும் விதமாகவே அட்லி இப்படியொரு பதிவை வெளியிட்டுள்ளதாகவும் சொல்லிவருகிறது. அந்தப் பதிவுக்கான உண்மையான அர்த்தம் அட்லிக்கே வெளிச்சம்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR