அட்லீ படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கும் ஷாருக்கான்.....!

அட்லீ, அடுத்ததாக ஷாருக்கானை வைத்து இயக்கும் அதிரடி ஆக்‌ஷன் கதையம்சம் கொண்ட இப்படம் தமிழ், இந்தி மொழிகளில் தயாராக உள்ளது. 

Last Updated : Sep 23, 2020, 03:08 PM IST
    1. அட்லீ, அடுத்ததாக ஷாருக்கானை வைத்து இயக்கும் அதிரடி ஆக்‌ஷன் கதையம்சம் கொண்ட இப்படம் தமிழ், இந்தி மொழிகளில் தயாராக உள்ளது.
    2. ஷாருக்கானின் (Shah Rukh Khan)அடுத்த படம் அட்லீ குமார் (Atlee) இயக்குகிறார்
    3. ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து கோலிவுட்டில் முன்னணி இயக்குனராக அட்லீ உயர்ந்துள்ளார்.
அட்லீ படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கும் ஷாருக்கான்.....! title=

ஷாருக்கானின் (Shah Rukh Khan)அடுத்த படம் அட்லீ குமார் (Atlee) இயக்குகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து கோலிவுட்டில் முன்னணி இயக்குனராக அட்லீ உயர்ந்துள்ளார். 

அட்லீ, அடுத்ததாக ஷாருக்கானை வைத்து இயக்கும் அதிரடி ஆக்‌ஷன் கதையம்சம் கொண்ட இப்படம் தமிழ், இந்தி மொழிகளில் தயாராக உள்ளது. இப்படத்திற்கு ‘சங்கி’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும், இதில் ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

 

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

ALSO READ | இயக்குனர் அட்லீ-யின் அடுத்த படைப்பு ‘அந்தகாரம்’; trailer வெளியானது...

இந்நிலையில், இப்படத்தில் நடிகர் ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஷாருக்கானின் பிறந்தநாளான நவம்பர் 2-ஆம் தேதி வெளியாக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் துப்பறியும் போலீஸ் மற்றும் வில்லன் என இரண்டு வேடங்களில் நடிகர் ஷாருக்கான் மிரட்ட உள்ளாராம். ஒரு சாருக்கான் நல்லவர், இன்னொரு சாருக்கான் கெட்டவர் என்பதை போல கதை அமைக்கப்பட்டுள்ளதாம்.

இதேபோல் தமிழ் சினிமாவில் பல படங்கள் வந்துள்ளன. விஜய் நடித்த அழகிய தமிழ் மகன் படம் கூட இதே கதைதான். 

நடிகர் ஷாருக்கான்  கடந்த 2018-ம் ஆண்டு வெளியான ஜீரோ படத்திற்கு பின் எந்த படத்திலும் நடிக்கவில்லை. இதனால் அட்லீ - ஷாருக்கான் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

 

ALSO READ | கொரோனா உதவிக்கு அட்லீ ரூ .10 லட்சம் நிவாரண நிதி அளித்தார்

Trending News