தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ரெஜிஸ்டர் ஆபிசில் வைத்து முத்துப்பாண்டி சண்முகத்தின் சட்டையை பிடித்து வம்பிழுத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜீ தமிழ் தொலைக்காட்சி அண்ணா (Anna Serial) எபிசோடில் இன்றைய எபிசோடில், அதாவது, ஷண்முகத்தின் மேல கையை வச்சா அவ்வளது தான் என்று ஊர் காரர்கள் சத்தம் போட முத்துப்பாண்டி வேற வழியின்று அங்கிருந்து கிளம்பி செல்கிறான். அடுத்து ஸ்கூலில் பதவியேற்று விழாவுக்கான ஏற்பாடுகள் நடக்க சௌந்தரபாண்டி முத்துபாண்டியுடன் இங்கு வருகிறான். 


முத்துப்பாண்டி இங்க எதுக்கு நாம வரணும் என்று கேட்க ஷண்முகத்தோட வெற்றியை பார்த்து வெறியேத்திக்கிட்டு அவனை கொல்லனும் என்று சொல்கிறார், ஷண்முகம் ரத்னா கையால் ஸ்கூல் சாவியை வாங்க வைத்து அவளை கரெஸ்பாண்ட்டாக பதவியேற்க வைக்கிறார். சனியன் சண்முகத்தை அவ்வளது சீக்கிரம் ஜெயிக்கவோ அழிக்கவோ முடியாது அவனுக்கு முருகன் துணை இருக்கிறார். அவன் முருகனோட தீவிர பக்தன். அவனை அழிக்க ஒரு யாகம் பண்ணனும் என்று சொல்கிறான்.


 


மேலும் படிக்க | வின்னர் படத்தில் வடிவேலுவுக்கு பதில் நடிக்க வேண்டியவர்! அட, இந்த நடிகரா..


இதை கேட்ட பாக்கியம் என்ன யாகம் என்று கேட்க சௌந்தரபாண்டி அவன் தியானம் பண்ணனும்னு சொல்லிட்டு இருக்கான் என்று சமாளிக்கிறார், அடுத்து முத்துப்பாண்டி சண்முகத்தை கொல்ல ஒரு திட்டம் இருப்பதாக சொல்ல நீ உன் திட்டப்படி பண்ணு, நான் சனியன் சொன்ன மாதிரி யாகத்தை பண்ணுறேன். எது எப்படியோ அந்த ஷண்முகம் அழியனும் என்று ஆவேசப்படுகிறார்.


அடுத்து ஷண்முகம் பஸ்ஸில் சென்று கொண்டிருக்கும் போது அவனை சுற்றிவளைக்கும் ரவுடிகள் கத்தியால் குத்தி கொல்லுவது போல் கனவு கண்டு பயந்து எழுகிறாள் பரணி. இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


மேலும் படிக்க | நினைத்தேன் வந்தாய் அப்டேட்: எழிலால் ஷாக்கான மனோகரி.. சுடர் கொடுத்த பதிலடி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ