2014ம் ஆண்டு வெளியான 'யாமிருக்க பயமேன்' படத்தை இயக்கிய இயக்குனர் டீகேயின் அடுத்த படைப்பு தான் 'காட்டேரி'.  இப்படத்தில் வைபவ், வரலக்ஷ்மி சரத்குமார், ஆத்மீகா போன்ற பலர் நடித்துள்ளனர்.  நகைச்சுவை மற்றும் திகில் கலந்த இந்த படம் ஆகஸ்ட்-5ம் தேதி திரையரங்குகளில் வெளியாகுகிறது.  1965ம் ஆண்டு காலகட்டத்தில் நடக்கும் காதலை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள படம் 'சீதா ராமன்'.  இப்படத்தில் துல்கர் சல்மான், ம்ருனால் தாகூர் மற்றும் ராஷ்மிகா ஆகியோர் நடித்துள்ளனர்.  இந்த படம் ஆகஸ்ட்-5ம் தேதி தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.  எஸ்.கே.வெற்றிச்செல்வன் இயக்கத்தில் ஜெய் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'எண்ணி துணிக'.  இப்படத்தில் கதாநாயகியாக அதுல்யாவும், வில்லனாக வம்சி கிருஷ்ணாவும் நடித்திருக்கின்றனர்.  சாம் சுரேஷ் என்பவரது தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் ஆகஸ்ட்-4ம் தேதி திரையரங்குகளில் வெளியாகுகிறது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | பீஸ்ட் பாடல் செய்த சாதனை - ரசிகர்கள் கொண்டாட்டம்


ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'குருதி ஆட்டம்'.  ராக்ஃபோர்ட்  எண்டெர்டெயின்மெண்ட் தயாரித்துள்ள இந்த படத்தில் பிரியா பவானி ஷங்கர், ராதிகா சரத்குமார் மற்றும் ராதாரவி ஆகியோர் நடித்துள்ளனர்.  ஆக்ஷன் கலந்து உருவாகியுள்ள இந்த படம் ஆகஸ்ட்-5ம் தேதி திரையரங்குகளில் வெளியாகுகிறது.  சந்தோஷ் பீட்டர் ஜெயக்குமார் இயக்கத்தில் பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பொய்க்கால் குதிரை'.  இந்த படத்தில் வரலக்ஷ்மி சரத்குமார், பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி ரைசா வில்சன் போன்ற பலர் நடித்துள்ளனர்.  இந்த படம் ஆகஸ்ட்-4ம் தேதி திரையரங்குகளில் வெளியாகுகிறது.  அடுத்ததாக ஆகஸ்ட்5ம் தேதி ரஞ்சன் க்ரிஷ்ணதேவன் இயக்கத்தில் 'மை டியர் லிசா' என்கிற திகில் படம் வெளியாகுகிறது.



சுனிஷ் குமார் இயக்கத்தில் பரத், ஆதில் இப்ராஹிம் மற்றும் அணு மோகன் ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள 'லாஸ்ட் 6 ஹவர்ஸ்'ஆகஸ்ட்5ம் தேதி வெளியாகுகிறது.  டேவிட் லெய்ட்ச் இயக்கத்தில் உருவாகியுள்ள 'புல்லட் ட்ரெயின்' என்கிற ஹாலிவுட் திரைப்படம் ஆகஸ்ட்-5ம் த்தி வெளியாகுகிறது.  பா.ரஞ்சித் இயக்கத்தில் பிரசன்னா மற்றும் அமலா பால் நடிப்பில் உருவாகியுள்ள 'விக்டிம்' திரைப்படம் ஆகஸ்ட்-5ம் தேதி சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகுகிறது.



மேலும் படிக்க | புஷ்பா 2-ல் அடமழை தான்! விஜய் சேதுபதிக்கு ஜோடி யார் தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ