ஓடிடி தளங்களின் வருகையால் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் ஒரு மாதத்திற்குள்ளாகவே ஓடிடி தளங்களில் வெளியாகின்றன. அந்த வகையில், இந்த வாரம் ஓடிடி தளங்களில் வெளியாகும் புது படங்களின் லிஸ்டை பார்க்கலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அயலான்:


சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்திருந்த படம், அயலான். இந்த படத்தை ‘இன்று நேற்று நாளை’படத்தின் இயக்குநர் ஆர்.ரவிகுமார் இயக்கியிருக்கிறார். இதில் ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். வேற்று கிரகத்தில் இருந்து வரும் ஏலியனுக்கு, நடிகர் சித்தார்த் வாய்ஸ் கொடுத்துள்ளார். அயலான் படம் குழந்தைகளை கவர்ந்ததை தொடர்ந்து, இப்படம் வரும் 9ஆம் தேதி சன் நெக்ஸ்ட் தளத்தில் வெளியாகிறது. 


கேப்டன் மில்லர்:


தனுஷ் ஹீரோவாக நடித்துள்ள படம், கேப்டன் மில்லர். இந்த படத்தை அருண் மாத்தேஸ்வரன் இயக்கியிருந்தார். இதில் பிரியங்கா மோகன், அதிதி பாலன் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களாக நடித்துள்ளனர். ஆக்‌ஷன் ஃப்ளிக்காக உருவாகியுள்ள இந்த படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பினை கொடுத்தனர். இந்த படம், அமேசான் பிரைம் தளத்தில் வரும் 9ஆம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகிறது. 


குண்டூர் காரம்:


மகேஷ் பாபு ஹீரோவாக நடித்திருந்த படம், குண்டூர் காரம். தெலுங்கில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் இது. இந்த படம், தமிழ் டப்பிங்கில் ஆஹா தளத்தில் வெளியாகிறது. 


இப்படிக்கு காதல்:


பரத்-ஜனனி ஜோடியாக நடித்துள்ள படம், இப்படிக்கு காதல். ரொமாண்டிக் படமாக உருவாகியுள்ள இந்த படம் ஆஹா தளத்தில் நேரடியாக விளையாடுகிறது. இக்ளூ படத்தின் இயக்குநர், பரத் மோகன் இப்படத்தையும் இயக்கியிருக்கிறார். 


பஹக்‌ஷாக்:


இந்தியில் உருவாகியுள்ள படம், பஹக்‌ஷாக். இந்த படம், நெட்ஃப்ளீக்ஸ் தளத்தில் நேரடியாக வெளியாகிறது. இதில் பூமி பட்னேக்கர், ஆதித்யா ஸ்ரீவஸ்தவா, சாய் தாம்ஹேங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். 


மேலும் படிக்க | தனுஷ்-அனிருத் நட்பில் விரிசல்!? காரணம் இதுதான்!


பபுள் கம்:


கடந்த ஆண்டு தெலுங்கு மொழியில் வெளியான படம், பபுள்கம். இந்த படத்தில் ஹர்ஷ்வர்தன் ரானே ஹீரோவாக நடித்துள்ளார். காதல் பாணியில் உருவான இந்த படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர். இப்படத்தை ஆஹா தளத்தில் பார்க்கலாம். 


பிற படங்கள்:


>காட்டேரா-ஜீ 5
>லண்ட்ரானி-இந்தி-ஜீ5
>கிச்சடி 2-இந்தி-ஜீ 5
>அயன்பாஜி-பெங்காலி-ஹாய்சாய்
>ஜெய்மகேந்திரன்-மலையாளம்-சோனி லிவ்
>ஆர்யா சீசன் 3-பாகம் 2-இந்தி-சோனி லிவ்
>எ கிள்ளர் பாரடாக்ஸ்-கொரியன்-நெட்ஃப்ளிக்ஸ் 


மேலும் படிக்க | Thalapathy 69:விஜய்யின் கடைசி படத்தை இயக்கப்போவது கார்த்திக் சுப்பராஜா? வெற்றி மாறனா? பதில் இதோ!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ