எஸ் எஸ் ராஜமவுலி இயக்கத்தில் தயாரான ‘பாகுபலி’ முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியை பெற்றநிலையில், அதன் தொடர்ச்சியான இரண்டாம் பாகம் பிரமாண்டமாக தயாராகி உலகமெங்கும் வெளியானது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இப்படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, நாசர், ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 


4 மொழிகளில் வெளியான இந்த திரைப்படம் திரையிடப்பட்ட அனைத்து அரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. முதல் நாளிலேயே 150 கோடி ரூபாய் வசூல் செய்த இந்திய திரைப்படம் என்ற சாதனையை பாகுபலி 2 நிகழ்த்தி உள்ளது.


பாகுபலி-2 வெளியாகி 3 நாட்கள் ஆகிய நிலையிலும் திரையிட்ட அனைத்து திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாகவே ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால், வசூலிலும் இப்படம் மிகப்பெரிய சாதனைகளை படைத்து வருகிறது. 


இந்தியில் ‘பாகுபலி-2’ படம் திரையிட்ட மூன்றே நாட்களில் ரூ.125 கோடிக்கும் அதிகமான வசூலை எட்டியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 


ஏற்கெனவே அமீர்கான் நடிப்பில் இந்தியில் வெளிவந்த ‘தங்கல்’ படம்தான் அதிக வசூலை பெற்றிருந்ததாக வரலாறு இருந்தது. அதற்கடுத்தப்படியாக சல்மான்கான் நடிப்பில் வெளிவந்த ‘சுல்தான்’ படம் ரூ.105.5 கோடி வசூலித்தது. 


தற்போது இந்த சாதனைகளை ‘பாகுபலி-2’ படம் முறியடித்துள்ளதாக கூறப்படுகிறது. படம் வெளிவந்த முதல்நாளில் மட்டும் ரூ.41 கோடியை வசூலித்துள்ளது. அடுத்தநாளில் 40.5 கோடியும், நேற்று 46.5 கோடியும் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.