வசூலை அள்ளிய ரீ-ரிலீஸ் பாட்ஷா!!
ரஜினிகாந்த் நடிப்பில் 21 வருடங்களுக்கு முன் வெளிவந்து மெகா ஹிட் அடித்த படம் பாட்ஷா. அட நம்ம சூப்பர் ஸ்டார் நடிப்பில் இப்படம் மீண்டும் ரீ-ரிலீஸ் கடந்த வாரம் ஆனது.
இப்படத்திற்கு தமிழகம் மட்டுமின்றி ஜப்பான், அமெரிக்கா, ப்ரான்ஸ் ஆகிய நாடுகளிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மக்கள் கூட்டம். புதிய ஒளித்தரம், ஒலித் துல்லியம், புது பின்னணி இசை என அசத்தியது படம். காட்சிக்குக் காட்சி அதிர்ந்தது அரங்கம். தலைவரின் பாட்ஷாவை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்
முதல் நாளில் இருந்து இப்போதுவரை அரங்கம் நிறைந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இதுவரை உலகம் முழுவதும் ரூ 1.75 கோடி வரை வசூல் செய்துவிட்டது.
ஒரு ரீ-ரிலீஸ் படம் இந்த அளவிற்கு வசூல் செய்தது பாட்ஷா மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது, இதன் மூலம் புதுப்படம் வெளியாகும் போது மட்டுமல்ல, உங்க பழைய படம் மறுபடியும் வெளியாகும் போதும் என்றுமே நான் தான் சூப்பர் ஸ்டார் என்பதை ரஜினி மீண்டும் நிரூபித்துவிட்டார்.