பாலா படங்கள் என்றதுமே அனைவரின் நினைவுக்கு வருவது அவர் படத்தில் நடிக்கும் கதாநாயகன், கதாநாயகி மற்றும் மற்ற நடிகர்கள் எல்லாம் எந்த மாதிரியான கெட்டப்பில் இருப்பார்கள் என்பது தான்.  நடிகர்களின் கெட்டப்பை வைத்தே இது பாலா இயக்கத்தில் வெளியான படம் என்பதை கண்டுபிடித்து விடலாம், அந்தளவிற்கு இவரது நடிக்கும் நட்சத்திரங்களின் கெட்டப் தனித்துவமாக இருக்கும்.  தற்போது இயக்குனர் பாலா 'வணங்கான்' படத்தில் பிசியாக இருப்பது அனைவருக்கும் தெரியும், இதில் தற்போது அருண் விஜய் கதாநாயகனாக ஒப்பந்தமாகி இருக்கிறார்.  ஆனால் இதற்கு முன்னர் 'வணங்கான்' படத்தில் சூர்யா தான் கதாநாயகனாக ஒப்பந்தமாகி இருந்தார், இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பும் கடந்த 2022-ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது.  அதன்படி இயக்குனர், சூர்யாவை வைத்து கிட்டத்தட்ட 40 நாட்கள் படப்பிடிப்பை நடத்தினார், ஆனால் திடீரென்று இப்படத்திலிருந்து சூர்யா விலகுவதாக அறிவிப்பு வெளியானது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | இதுவரை ஆஸ்கார் விருதுகளை வென்ற இந்தியர்கள் யார் யார் தெரியுமா?


'வணங்கான்' படத்தில் சூர்யா கதாநாயகனாக ஒப்பந்தமானது மட்டுமின்றி, இப்படத்தின் தயாரிப்பாளராகவும் இருந்தார்.  கதாநாயகன் பாத்திரத்திலிருந்து விலகியது மட்டுமின்றி சூர்யா தயாரிப்பு பணியையும் தொடராமல் படத்தை விட்டு முழுவதுமாக விலகினார்.  இயக்குனர் பாலா மற்றும் நடிகர் சூர்யா இருவரும் இணக்கமாக பேசி இந்த முடிவை எடுத்து திட்டத்தை தொடராமல் பிரிந்தனர்.  இருப்பினும் இயக்குனர் பாலா இந்த திட்டத்தை கைவிடாமல் சூர்யாவுக்கு பதிலாக வேறு நட்சத்திரத்தை நடிக்க வைக்க முடிவு செய்து, தேடுதல் வேட்டையை நடத்த ஆரம்பித்தார்.  அதன்பிறகு இப்படத்தில் அருண் விஜய் கதாநாயகனாக ஒப்பந்தமானார், முன்னர் 'வணங்கான்' படத்தில் க்ரித்தி ஷெட்டி நடிப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது அவருக்கு பதிலாக ரோஷ்னி பிரகாஷ் நடிக்கிறார்.  இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் 9 முதல் தொடங்கப்பட்டுள்ளது, கிட்டத்தட்ட ஒரு மாத காலம் கன்னியாகுமரி பகுதியில் படத்தின் முக்கியமான காட்சிகளை படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.



படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் 'வணங்கான்' படத்தின் கதாநாயகன் அருண் விஜய்யின் கெட்டப் இணையத்தில் கசிந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.  பாலா படத்தின் கதாநாயகன் என்பதற்கேற்ப முரட்டுத்தனமான தோற்றத்தில் அருண் விஜய் காட்சியளிக்கிறார்.  அருண் விஜய் அவரது கேரவனில் இருந்து வெளியே இறங்கி படப்பிடிப்பு தளத்திற்குள் செல்லும் காட்சி தான் இணையத்தில் கசிந்துள்ளது.  இப்படத்தின் பர்ஸ்ட் லுக் இன்னும் சில வாரங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது மற்றும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.


மேலும் படிக்க | ஆஸ்கார் மேடையில் கண்ணீர் விட்ட தீபிகா படுகோனே! இதுதான் காரணம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ