தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கிறார் விஜய்.  வருடத்திற்கு ஒரு படம் வீதம் தற்போது நடித்து வருகிறார்.  நெல்சன் இயக்கத்தில் சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் பீஸ்ட் என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார் விஜய்.  இந்த படத்தினை பற்றிய அறிவிப்பு வெளிவந்ததில் இருந்தே எதிரிபார்ப்பு அதிகமாகி உள்ளது.  முன்னணி இயக்குனர்களை விட்டு விலகி தற்போது இளம் இயக்குனர்களுடன் தொடர்ந்து படம் நடித்து வருகிறார்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த பொங்கல் தினத்தில் லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படம் கொரோனாவிற்கு பின் வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்தது.  சமீபத்தில் நெல்சன் - சிவகார்த்திகேயன் கூட்டணியில் வெளியான டாக்டர் திரைப்படம் மக்களிடையே மிகப்பெரிய வெற்றி அடைந்தது.  டார்க் காமெடியை மையமாக வைத்து எடுக்கபட்ட இந்த திரைப்படம் வசூலிலும் சாதனை படைத்தது.  இதனால் தற்போது அனைவரது பார்வையும் நெல்சனின் அடுத்த படமான பீஸ்ட் மேல் திரும்பி உள்ளது.  



படத்தின் தலைப்பு, நடிகர்கள் பற்றிய அறிவிப்பை தவிர மற்ற தகவல்கள் எதுவும் வெளிவராமல் படக்குழு பார்த்து வருகிறது.  சமீபத்தில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து ஒரு வீடியோ வெளியானது.  இந்நிலையில் தீபாவளி தினத்தில் பீஸ்ட் படத்தில் இருந்து பாடல் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.  இது குறித்து படக்குழுவினரிடம் இருந்து அதிகார்வபூர்வ அறிவுப்பு வெளிவரவில்லை.  தீபாவளி தினத்தில் சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் உருவான அண்ணாத்த திரைப்படம் வெளிவர இருப்பதால், பீஸ்ட் பட பாடல் வெளியீட்டை தள்ளிவைத்திருப்பதாக கூறப்படுகிறது.  விரைவில் பீஸ்ட் படத்தில் இருந்து முதல் சிங்கிள் வெளியாகும் என்று படக்குழு வட்டாரங்களில் இருந்து தகவல் வருகிறது.


ALSO READ சூப்பர் ஹிட் படங்களின் ரீமேக் வாய்ப்பை நிராகரித்த சிவகார்த்திகேயன்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR