நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள ஆக்ஷன் திரைப்படம் "பீஸ்ட்". இப்படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு, ஷைன் டாம் சாக்கோ, ரெடின் கிங்ஸ்லி, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ், லில்லிபுட் ஃபருக்கி, அங்கூர் அஜித் விகல் மற்றும் சதீஷ் கிருஷ்ணன் ஆகியோர் நடித்துள்ளனர்.  இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


ஏப்ரல் 9,2021-ல் ஜார்ஜியாவில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு 15 நாட்கள் படப்பிடிப்பிற்குப் பிறகு, ஏப்ரல் 26 அன்று படக்குழு சென்னை திரும்பியது, அங்கு ஒரு அறிமுகப் பாடல் மற்றும் சில அதிரடி காட்சிகள் படமாக்கப்பட்டன.   கொரோனா தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படப்பிடிப்பு பணிகள் மீண்டும் ஜூலை மாதத்தில் தொடங்கியது.  படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் நடந்து முடிந்த பிறகு, இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. 



கனமழை காரணமாக ஒரு பாடல் மட்டும் நிறைவு செய்யப்படாமல் இருந்ததையடுத்து அதன் படப்பிடிப்பு சென்னையில் நடத்தப்பட்டது.  சமீபத்தில் இப்படத்தின் 100-வது நாள் கொண்டாட்டத்தை தெரிவிக்கும் விதத்தில் புகைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.  


சமீபத்தில் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் ஒரு புகைப்படமும் வெளியானது.  அதனையடுத்து இப்படத்தின் முதல் சிங்கிள் எப்போதும் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது அதுகுறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.  அதன்படி பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ரசிகர்களுக்கு புத்தாண்டு விருந்தாக ரிலீசாக உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.  அனிருத் இசையில் வெளியாகும் இந்த பாடலை நடிகர் விஜய் பாடியுள்ளதாகவும், பாடல் வரிகளை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியாகவும் ஏற்கனவே தகவல் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ | தள்ளிபோகிறதா விஜய்யின் படம்?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR