விஜய் நடித்திருக்கும் பீஸ்ட் படம் வரும் 13ஆம் தேதி வெளியாக இருக்கிறது. நெல்சன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் பெரும் வரவேற்பு அளித்தனர். அதேசமயம், ஒருதரப்பினர் ட்ரெய்லரை வைத்து பார்க்கையில் இந்தப் படமானது கூர்கா படம் மற்றும் மணி ஹீஸ்ட் வெப் சீரிஸின் காப்பி போன்று இருப்பதாக கூறினர். 



இந்த கருத்தானது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதற்கிடையே பீஸ்ட் படத்தை தடை செய்ய வேண்டுமென்ற கோரிக்கையும் இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் வைக்கப்பட்டது. ஆனால் இதற்கு படத்தின் இயக்குநரான நெல்சன் திலீப்குமார் எதுவும் கூறாமல் அமைதியாக இருந்தார்.


இந்நிலையில் பீஸ்ட் படம் காப்பி என்ற கருத்துக்கு இயக்குநர் நெல்சன் திலீப்குமார் பதிலளித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “என் படம் எந்த படத்தின் காப்பியும் இல்லை. நானும் கூர்கா படம் பார்த்திருக்கிறேன். மணி ஹீஸ்ட் கதையை பயன்படுத்தவில்லை.



ஒரு ஷாப்பிங் மாலை ஹைஜாக் செய்யும் கதை ஒன்றும் சினிமாவுக்கு புதிது அல்ல. அதை கையாளும் விதத்தில்தான் எல்லாமே இருக்கிறது. ட்ரெய்லரை பார்த்துவிட்டு எந்த முடிவுக்கும் வர வேண்டாம். ட்ரெய்லரில் ஒன்று இருக்கும், படத்தில் வேறு இருக்கும்.  யாரையும் புண்படுத்தும் விதமாக படத்தில் எதுவுமே இல்லை. 


மேலும் படிக்க | விஜய் குறித்து 2018-ல் ராஷ்மிகா போட்ட ட்வீட்! அப்பவே இப்படியா?


எனக்கு ஒரு படம் பண்ணுங்க என்று விஜய் சார் சொன்னார். அதன் பிறகு அவருக்காக எழுதிய கதைதான் இது. விஜய் சார் படங்களில் இருந்து பீஸ்ட் வித்தியாசமாக இருக்கும்” என்றார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


மேலும் படிக்க | தளபதி 66 படத்தில் இணைந்த இரண்டு முக்கிய நடிகர்கள்!


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR