நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். இப்படத்தின் பாடல்களும், ட்ரெய்லரும் வெளியாகி ரசிகர்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளன.  மால் ஒன்றை கைப்பற்றி மக்களை தீவிரவாதிகள் பணையக்கைதிகளாக வைத்திருப்பதும், அவர்களிடமிருந்தும் மக்களை நடிகர் விஜய் மீட்பதும் என கதை நகரும் என்று கூறப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | விவாகரத்துக்கு பிறகு சமந்தா நடிக்கும் புதிய படம்!


ட்ரெய்லரில் இடம்பெற்ற காட்சிகளும் அதனை உறுதிப்படுத்தும்விதமாகவே அமைந்திருக்கிறது. இப்படத்தில் விஜய் ரா ஏஜெண்ட்டாக வீரராகவன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆபத்தில் சிக்கும் மக்களை மீட்கும் கதாநாயகன் என்ற வழக்கமான ஒன்லைனாக பீஸ்ட் படம் இருந்தாலும், நெல்சன் தனது மேக்கிங்கில் வித்தியாசம் காட்டுபவர் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பல மடங்கு அதிகரித்துள்ளது. ஏப்ரல் 13ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பீஸ்ட் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், பீஸ்ட் படத்தின் கதையை அமெரிக்காவின் கேலக்ஸி திரையரங்கம் வெளியிட்டுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.



அதன்படி, “நகரின் பரபரப்பான பகுதியை பயங்கரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுந்து பயங்கரவாத அமைப்பின் தலைவரை விடுவிக்கக்கோரி இந்திய அரசுக்கு மிரட்டல் விடுக்கின்றனர். பயங்கரவாதிகளை பிடிக்க அமைக்கப்பட்ட தனிப்பிரிவின் தலைவருக்கு, பயங்கரவாதிகளால் சிறைபிடிக்கப்பட்ட மாலுக்குள் ரா உளவு அமைப்பின் முன்னாள் அதிகாரி இருப்பது தெரியவருகிறது. இதனையடுத்து பயங்கரவாதிகளால் சிறைபிடிக்கப்பட்டவர்களை மீட்க, அவரது உதவியை நாடுகின்றனர். 


மேலும் படிக்க | அட இத கவனிக்காம விட்டாச்சே! பீஸ்ட் படத்தில் நடித்திருக்கும் சமந்தா?


அந்த முன்னாள் அதிகாரி பயங்கரவாதிகளுக்கு எதிராக செயல்படத் தொடங்குகிறார். அதன் ஒரு பகுதியாக பயங்கரவாத அமைப்பின் தலைவரை அரசு விடுவிக்க சம்மதிக்கிறது. இந்தச் சூழலில் அந்த முன்னாள் உளவு அதிகாரி புத்திசாலித்தனமாக செயல்பட்டு பயங்கரவாதிகளால் சிறை பிடிக்கப்பட்டவர்களை மீட்டு, பயங்கரவாதிகளை தீர்த்துக்கட்டுகிறார்” என்று அதில் குறிப்பிட்டுள்ளது. 


பீஸ்ட்டின் கதை என்ற பெயரில் இப்படி வெளியாகியிருக்கும் தகவல் விஜய் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக பீஸ்ட் படத்தின் காட்சிகளும் இணையத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR