அட இத கவனிக்காம விட்டாச்சே! பீஸ்ட் படத்தில் நடித்திருக்கும் சமந்தா?

விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13-ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.   

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 5, 2022, 02:19 PM IST
  • பீஸ்ட் ட்ரைலர் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்துள்ளது.
  • படம் ஏப்ரல் 13ம் தேதி வெளியாக உள்ளது.
  • சமந்தாவின் இன்ஸ்டா ஸ்டோரி வைரல் ஆகி வருகிறது.
அட இத கவனிக்காம விட்டாச்சே! பீஸ்ட் படத்தில் நடித்திருக்கும் சமந்தா? title=

விஜய் மற்றும் நெல்சன் கூட்டணியில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாகவுள்ளது.  கடந்த வருடம் வெளியான மாஸ்டர் படத்திற்கு பிறகு வெளியாகும் விஜய் படம் என்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. மேலும் டாக்டர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு நெல்சன் விஜய்யை வைத்து இயக்கியுள்ளார். இப்படத்தில் விஜய், பூஜா ஹெக்டே மற்றும் செல்வராகவன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, ஷைன் டாம் சாக்கோ, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி மற்றும் ஜான் விஜய் ஆகியோர் துணை வேடங்களில் நடிக்கின்றனர். 

மேலும் படிக்க | பீஸ்ட் டிரெய்லரை பார்த்த கேஜிஎப் இயக்குனரின் ரியாக்சன்!

காதலர் தினத்தன்று இப்படத்திலிருந்து அரபிக் குத்து என்ற முதல் பாடல் வெளியாகி கிட்டத்தட்ட 250 மில்லியன் பார்வைகளை யூடியூபில் கடந்துள்ளது. இரண்டாவதாக வெளியான ஜாலியோ ஜிம்கானா பாடலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பீஸ்ட் படத்தின் டிரைலர் வெளியானது. மூன்று நிமிடம் இருந்த பீஸ்ட் டிரைலரில் கிட்டத்தட்ட படத்தின் கதையை சொல்லி இருந்தனர். தீவிரவாதிகள் ஒரு வணிக வளாகத்தை ஹைஜாக் செய்ய அதற்குள் எதிர்பாராத விதமாக மாட்டிக்கொள்ளும் விஜய் அங்கிருந்த மக்களை எப்படி காப்பாற்றுகிறார் என்பதே பீஸ்ட் படத்தின் கதையாக காண்பிக்கப்பட்டது. 

mall

ட்ரெய்லர் வெளியானதிலிருந்து இந்த வணிக வளாகத்தின் செட் ஒர்க் பற்றி பரவலாக பேசப்பட்டது. இந்நிலையில் கடந்த ஆண்டு நடிகை சமந்தா பதிவிட்ட இன்ஸ்டாகிராம் ஸ்டோரி தற்போது வைரல் ஆகி  வருகிறது. அந்த ஸ்டோரியில் பீஸ்ட் படத்தின் மால் செட் இடம்பெற்றிருந்தது. அந்த சமயத்தில் இதனை பற்றி யாருக்கும் தெரியாததால் யாரும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் தற்போது இது வைரலாகி வருகிறது. ஒருவேளை பீஸ்ட் படத்தில் சமந்தா நடித்துள்ளாரா என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது. ஆனால் அந்த சமயத்தில் சமந்தா அந்த செட் அருகில் உள்ள ஹோட்டலில் தங்கி இருந்ததால் எதர்ச்சியாக இதனை பதிவிட்டுள்ளார் என்றே கூறப்படுகிறது. ஒருவேளை சஸ்பென்சாக படத்தில் வந்தாலும் ஆச்சரியத்திற்கு பஞ்சமில்லை.

beast

மேலும் படிக்க | 4 கார் இருக்கும்போது சைக்கிள்ல போனது ஏன்?- விஜய் பதில்?!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News