Beast vs KGF-2: இறுதியில் தமிழ்நாட்டில் வென்றது யார்?
பீஸ்ட் மற்றும் கே.ஜி.எஃப்-2 ஆகிய படங்களின் தமிழக வசூல் பற்றிய விபரங்கள் வெளியாகியுள்ளன.
விஜய் நடித்த ‘பீஸ்ட்’டும் பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடித்த ‘கே.ஜி.எஃப்-2’ படமும் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆவதாக அறிவிக்கப்பட்டதிலிருந்தே சினிமா வட்டாரம் பரபரப்பானது.
இரு படங்களும் பான் இந்தியா ரிலீஸாக வெளியானதால் ரசிகர்களிடையேயான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்தது. மார்ச் 13ஆம் தேதி பீஸ்ட் வெளியான நிலையில், அதற்கு அடுத்த நாள் கேஜிஎஃப்-2 வெளியானது. இந்திய அளவில் கேஜிஎஃப்-2 வசூலில் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளது. வசூல் பட்டியலில் முன்னணியில் இருந்துவந்த பல முன்னணி நாயகர்களின் பட சாதனைகளையும் இப்படம் தகர்த்துவருகிறது.
அந்த வகையில் இப்படம் உலகளவில் 1000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. இதையடுத்து தமிழகத்தில் இப்படத்தின் வசூல் நிலவரம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படம் தமிழகத்தில் மட்டும் சுமார் 100 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளதாம். விஜய் நடித்த பீஸ்ட் படத்தைப் பொறுத்தவரை உலகளவில் சுமார் 250 கோடி ரூபாய் வசூல் குவித்துள்ளதாம்.
நடப்பாண்டில் அதிக வசூல் செய்த தமிழ்ப்படம் எனும் சாதனையைப் படைத்துள்ள பீஸ்ட் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 120 கோடி ரூபாய் அளவுக்கு கலெக்சன் ஈட்டியுள்ளதாம். அந்த வகையில், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை யஷ்ஷின் கேஜிஎஃப்பை விட விஜய்யின் பீஸ்ட்தான் தற்போது வரை வசூலில் முன்னணியில் இருந்துவருகிறது.
திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் பீஸ்ட், வருகிற 11ஆம் தேதி ஓடிடியில் வெளியாகவுள்ளது. நெட்ப்ளிக்ஸ் மற்றும் சன் நெக்ஸ்ட் ஆகிய தளங்களில் இப்படம் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | நடிகை மஞ்சு வாரியர் கடத்தலா?! - நடந்தது என்ன? பரபரக்கும் சினிமா உலகம்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR