நடிகை மஞ்சு வாரியர் கடத்தலா?! - நடந்தது என்ன? பரபரக்கும் சினிமா உலகம்!

இயக்குநரின் பதிவும் மஞ்சு வாரியரின் மெளனமும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 3, 2022, 01:22 PM IST
  • ‘ஹவ் ஓல்டு ஆர் யூ’ படம் வாயிலாக கம்பேக் கொடுத்தார் மஞ்சு வாரியர்.
  • இயக்குநர் சனல்குமார் சசிதரன், மஞ்சு வாரியர் பற்றிப் பரபரப்பு பதிவு
  • மஞ்சு வாரியரின் மெளனம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
நடிகை மஞ்சு வாரியர் கடத்தலா?! - நடந்தது என்ன? பரபரக்கும் சினிமா உலகம்! title=

மலையாள சினிமாவில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருந்துவருபவர் மஞ்சு வாரியர்.

1995ஆம் ஆண்டு முதல் 1999 வரை ஏராளமான படங்களில் நடித்த மஞ்சு வாரியர் 1998 ஆண்டு நடிகர் திலீப்பைத் திருமணம் செய்துகொண்ட பிறகு சினிமாவுக்கு முழுக்குப் போட்டார். பின்னர் 2014ஆம் ஆண்டு இருவருக்கும் இடையே விவாகரத்து ஆனது. இதையடுத்து மீண்டும் சினிமாவுக்கு நடிக்க வந்த அவர், ‘ஹவ் ஓல்டு ஆர் யூ’ எனும் படம் வாயிலாக கம்பேக் கொடுத்தார். 

சினிமாவில் மஞ்சு வாரியரின் இரண்டாவது இன்னிங்ஸ் பெரிய அளவில் பேசப்பட்டது. தொடர்ந்து படங்களில் நடித்துவரும் அவர், வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் படத்தின் வாயிலாக தமிழிலும் அறிமுகமானார். இப்படமும் அவருக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுத்தந்தது.

                                      Manju Warrier

இந்நிலையில் நடிகை மஞ்சு வாரியர் பற்றித் திடுக்கிடும் தகவல் ஒன்று சினிமா உலகில் தற்போது வலம்வந்துகொண்டிருக்கிறது. இவ்விவகாரத்தை முதலில் கவனப்படுத்தியவர் இயக்குநர் சனல்குமார் சசிதரன். 

ஃபேஸ்புக்கில் இது தொடர்பாகத் தெரிவித்துள்ள பிரபல மலையாள இயக்குநரான சனல்குமார் சசிதரன், நடிகை மஞ்சு வாரியர், சிலரின் பிடியில் சிக்கியுள்ளதாகவும் மஞ்சு வாரியரின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளார். 

மேலும் படிக்க | இணையத்தில் வைரலாகும் அஜித்தின் ‘வெயிட் லாஸ்’ புகைப்படம்! - உள்ளே!

 

மஞ்சு வாரியர் தரப்பிலிருந்து இதுவரை எந்தத் தகவலும் வெளியாகாததால் தனது சந்தேகம் மேலும் வலுவடைந்துள்ளதாகவும் சனல்குமார் சசிதரன் கவலை தெரிவித்துள்ளார்.
இயக்குநரின் இந்தப் பதிவும் மஞ்சு வாரியரின் மெளனமும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ள நிலையில், சினிமா வட்டாரத்தில் இவ்விவகாரம் தற்போது பேசுபொருளாகியுள்ளது.

மேலும் படிக்க | ராஜமெளலி படத்தில் நடிப்பவர்களைத் துரத்தும் வித்யாசமான சோகம்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News