‘பீஸ்ட்’ டீம் எடுத்த புது முடிவு- ரசிகர்கள் அப்செட்!
விஜய் நடித்துள்ள பீஸ்ட் படம் ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது.
மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து விஜய் நடித்துள்ள படம் பீஸ்ர். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தமிழ்ப் புத்தாண்டு மற்றும் கோடை விடுமுறை விருந்தாக வருகிற 13ஆம் தேதி இப்படம் உலகம் முழுக்க ரிலீஸ் ஆகவுள்ளது. வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி இப்படத்தின் டீசர் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், இப்படத்தின் புதிய டைட்டில் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.
அதில், தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள வெர்சனில் இப்படத்துக்கு பீஸ்ட் எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. கன்னடத்தில் ‘தி பீஸ்ட்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஆனால் இதன் இந்தி வெர்சனுக்கு ‘ரா’ (Raw) எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டர்கள் இணையத்தில் கவனம் பெற்று வருகின்றன. இந்த நிலையில் மற்ற வெர்சனின் டைட்டிலுடன் ஒப்பிடுகையில் இந்திக்கு வைக்கப்பட்டுள்ள டைட்டில் சற்று பொருத்தமில்லாமல் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்.
மேலும் படிக்க | விஜய்யின் ‘பீஸ்ட்’டில் கை வைத்த உதயநிதி! - என்ன ஆச்சாம்?!
குறிப்பாக, விஜய்யுடன் பீஸ்ட்டுடன் மோதவுள்ள கேஜிஎஃப்- 2 திரைப்படம் அனைத்து மொழியிலும் ஒரே பெயரில்தான் ரிலீஸ் ஆகவுள்ளது. பீஸ்ட் எனும் சொல்லும் ஆங்கிலத்தில் இருப்பதால் அதையே அனைத்து மொழிகளுக்கும் டைட்டிலாக வைப்பதில் எந்தச் சிக்கலும் இருக்கப் போவதில்லை. இவ்வாறு இருக்க பீஸ்ட் படக்குழு இந்த முடிவை ஏன் எடுத்தது என ரசிகர்கள் குழப்பத்துக்கு ஆளாகியுள்ளனர்.
அதேபோல, ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் படம் தொடர்பாக கருத்துகள் தெரிவிக்கும்போது ஒரேவிதமான டைட்டில் இருந்தால் ஹேஷ்டேக்கில் ஷேர் செய்யவோ, மென்சன் செய்யவோ வசதியாக இருக்கும்; அவ்வாறு இல்லாமல் ஒரே படம் வெவ்வேறு டைட்டில்களில் வெளியாகும்போது சோசியல் மீடியா ட்ரெண்டிங்கில் இது அப்படத்துக்கு பின்னடைவை ஏற்படுத்தும் எனவும் ரசிகர்கள் கூறிவருகின்றனர்.
மேலும் படிக்க | ‘பீஸ்ட்’டை இவங்களாம் பாக்கக் கூடாதாம்! - ஏன் தெரியுமா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR