விஜய்யின் ‘பீஸ்ட்’டில் கை வைத்த உதயநிதி! - என்ன ஆச்சாம்?!
பீஸ்ட்- கே.ஜி.எஃப்-2 ஆகிய இரு படங்களும் ஒரே சமயத்தில் ரிலீஸ் ஆவதால் தமிழ்ப் புத்தாண்டில் ரசிகர்களுக்கு செம ட்ரீட் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் வருகிற 13ஆம் தேதி உலகம் முழுக்க ரிலீஸ் ஆகவுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பீஸ்ட் ரிலீஸுக்கு மறுநாளான ஏப்ரல் 14ஆம் தேதி, யஷ் நடிப்பில் உருவாகியுள்ள கே.ஜி.எஃப்-2 ரிலீஸ் செய்யப்படவுள்ளது. பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கும் நல்ல எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இரு படங்களும் ஒரே சமயத்தில் ரிலீஸ் ஆவதால் இந்த தமிழ்ப் புத்தாண்டில் ரசிகர்களுக்கு செம ட்ரீட் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதே இருதரப்பு ரசிகர்களும் போட்டிபோட்டுக்கொண்டு மீம்ஸ் மழை பொழியவும் ஆரம்பித்துவிட்டனர். விஜய் ரசிகர்கள் ‘ஜாலியோ ஜிம்கானா’வை ஒருபுறம் ஷேர் செய்ய, மற்றொருபுறமோ, ‘டூஃபான்’ பாடலை யஷ் ரசிகர்கள் ஷேர் செய்துவருகின்றனர்.
மேலும் படிக்க | ஆந்திராவையும் மிரட்டும் ‘பீஸ்ட்’: வேற லெவல் பிசினஸ்!
கே.ஜி.எஃப்- 2 படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமையை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதையடுத்து விஜய்யின் பீஸ்ட் படத்தின் தமிழக உரிமையைக் கைப்பற்றப்போவது யார் எனும் எதிர்பார்ப்பு நிலவிவந்தது. தற்போது அதற்கு விடை கிடைத்துள்ளது. அந்த வகையில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம்தான் பீஸ்ட் தமிழக விநியோக உரிமையைப் பெற்றுள்ளதாம். பீஸ்ட் தெலுங்கு உரிமையை தில் ராஜுவுடன் இணைந்து ஏசியன் சுனில் மற்றும் சுரேஷ் பாபு கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | ‘பீஸ்ட்’டை இவங்களாம் பாக்கக் கூடாதாம்! - ஏன் தெரியுமா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR