விஜய் நடித்துள்ள பீஸ்ட் படம் வருகிற 13ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அப்படம்தான் தற்போதைய ‘டாக் ஆப் தி டவுன்’ ஆக இருந்துவருகிறது. பீஸ்ட் படத்தின் அப்டேட் குறித்த தகவல்களும் வரிசை கட்டி வந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில், இப்படத்தின் தெலுங்கு விநியோக உரிமை பற்றிய புதிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதன்படி, பீஸ்ட் படம் சுமார் ரூ.11 கோடி அளவுக்கு தெலுங்கு தியேட்டர் விநியோக உரிமையாக விலைபோயுள்ளதாம்.
இதில் ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள அடுத்த படத்தைத் தயாரிக்கவுள்ள தில் ராஜுதான் ‘பீஸ்ட்’டின் தெலுங்கு விநியோக உரிமையை வாங்கியுள்ளாராம். தில் ராஜுவுடன் ஏசியன் சுனில் மற்றும் சுரேஷ் பாபுவும் இணைந்து இதனைக் கைப்பற்றியிருக்கிறார்களாம். சமீபகாலமாக விஜய்யின் திரைப்படங்கள் தெலுங்கில் சூப்பர் ஹிட் அடித்து வசூலைக் குவித்துள்ளன. ஆந்திரா மற்றும் தெலங்கானாவிலும் விஜய்க்கு பெரும் ரசிகர் படை இருக்கிறது. அந்த அடிப்படையில்தான் பெரும் தொகை கொடுத்து விஜய்யின் பீஸ்ட் தற்போது வாங்கப்பட்டுள்ளதாம்.
மேலும் படிக்க | ‘பீஸ்ட்’டை இவங்களாம் பாக்கக் கூடாதாம்! - ஏன் தெரியுமா?
விஜய்யின் பீஸ்ட்டுடன், கே.ஜி.எஃப்புக்கு பிறகு ‘திடீர்’ தென்னிந்திய ஸ்டாராக மாறியுள்ள நடிகர் யஷ்ஷின் ‘கே.ஜி.எஃப்-2’ படமும் ரிலீஸ் ஆகவுள்ளது. விஜய்யின் பீஸ்ட் ஒருநாள் முன்னதாகவே ரிலீஸ் ஆனாலும் இரு படங்களுக்கு இடையேதான் தற்போது கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. அதேநேரம் இந்த இரு படங்களில் எது வசூலைக் குவித்தாலும் தில் ராஜுவுக்கு பிரச்னை இருக்க வாய்ப்பில்லையாம். ஏனென்றால் பீஸ்ட் தெலுங்கு உரிமத்தை வாங்கியுள்ள தில் ராஜுதான் கே.ஜி.எஃப்- 2 தெலங்கானா மாநில உரிமத்தையும் வாங்கியுள்ளாராம்.
மேலும் படிக்க | பீஸ்ட்-உடன் ஒத்தைக்கு ஒத்தை மோதும் படம் : வெற்றி யாருக்கு!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR