விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்துவரும் நெல்சனுடன் விஜய் இணைவதால் இப்படத்திற்கு அதிகப்படியான எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.அதற்கு வலுகூட்டும் வகையில் இதுவரை வெளியிடப்பட்டுள்ள இரண்டு பாடல்களுமே மெஹா ஹிட்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | அஜித் - ஷாலினியின் காதலுக்கு வயது 23..!


கொரோனா காரணமாக பல திரைப்படங்கள் வெளியாகாமல் கிடப்பில் இருப்பதால் அனைத்தையும் அடுத்தடுத்து வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டு வருகிறார்கள். அதன்படி பல பெரிய பட்ஜெட் படங்கள் வரிசைகட்டி திரைக்கு வந்து கொண்டிருக்கின்றன.


அந்த வகையில் ராஜமொளியின் RRR திரைப்படம் மார்ச் 25ஆம் தேதி திரைக்கு வருகிறது. அதனைத் தொடர்ந்து மெஹா ஹிட்டான கன்னட திரைப்படமான KGFஇன் இரண்டாம் பாகம் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த இரண்டு PAN India படத்திற்கும் ஏக எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில் பீஸ்ட் திரைப்படமும் ஏப்ரல் 13 வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.


 



 


KGF - 2 மற்றும் பீஸ்ட் திரைப்படங்கள் அடுத்தடுத்த நாள் வெளியாக இருப்பதால் வெற்றிபெற போகும் திரைப்படம் எது என்ற எதிர்பார்ப்பு இப்போதே எகிற ஆரம்பித்திருக்கிறது.


மேலும் படிக்க | மீண்டும் அடுத்தடுத்து வெளியாகும் விஜய் சேதுபதியின் படங்கள்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR