பெண் இயக்குநர்கள் வந்தால் சண்டையும் கூடவே வரும் - பீஸ்ட் பட நடிகரின் சர்ச்சை பேச்சு
பெண் இயக்குநர் வந்தால் சண்டைகளும் கூடவே வரும் என பீஸ்ட் படத்தில் வில்லனாக நடித்த சாக்கோ கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான பீஸ்ட் படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறவில்லை. அனிருத் இசை மட்டுமே படத்தில் தேறியதாக ரசிகர்கள் விமர்சித்தனர். அதுமட்டுமின்றி விஜய் என்ற பெரிய ஹீரோவை வைத்துக்கொண்டு திரைக்கதையில் கவனம் செலுத்தாமல் நெல்சன் கோட்டைவிட்டுவிட்டார் எனவும் கூறினர். இப்படிப்பட்ட சூழலில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்த விக்ரம் படம் மெகா ஹிட்டானது. அந்தச் சமயத்தில் நெல்சனையே விஜய் ரசிகர்கள் வறுத்தெடுத்தனர். ஒரு இயக்குநர் தோல்வி படம் கொடுப்பது இயல்புதான். அதற்காக எல்லை மீறி நெல்சன் விமர்சிக்கப்படுகிறார் என அவருக்கு ஆதரவாகவும் சிலர் பேசினர்.
இதனையடுத்து பீஸ்ட் படத்தின் வில்லனாக நடித்த சாக்கோ கொடுத்திருக்கும் பேட்டி விவாதமாகியுள்ளது. தனியார் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “தமிழ் சினிமாவுக்கே பீஸ்ட் படம் நல்ல என்ட்ரியாக அமையவில்லை. நான் இன்னும் பீஸ்ட் படத்தை பார்க்கவில்லை. பீஸ்ட் படம் தொடர்பான மீம்ஸ்களையும், ட்ரோல்களையும்தான் பார்த்திருக்கிறேன்.
ஒருவரை அடித்து தூக்கி வரும்போது, அவரது எடைக்கு ஏற்றவாறு, அவரை தூக்கிவருபவர் தான் சிரமப்படுவதை தன்னுடைய முகத்தில் ரியாக்ஷனாக காண்பிக்க வேண்டும். ஆனால், படத்தில் ஏதோ ஒரு பேப்பரை தூக்கி வருவதுபோல விஜய் என்னைத் தூக்கி வருவார். இதற்காக விஜய் சாரை குறை சொல்ல முடியாது. ஆனால் படக்குழுதான் இதற்கு பொறுப்பு ஏற்க வேண்டும்” என்று கூறினார். அவரது அந்தப் பேச்சு சர்ச்சையையும், விவாதத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அவரது பேச்சு தற்போது சர்ச்சையாகியுள்ளது. சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த டாம் சாக்கோ, ‘சினிமா துறையில் பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் சில பிரச்னைகள் உள்ளன’ என்று கூறினார். அதற்கு செய்தியாளர் ஒருவர், ‘பெண் இயக்குனர்கள் அதிகம் இருந்தால் பிரச்னைகள் தவிர்க்கலாம் அல்லவா?’ என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த அவர் ‘பெண் இயக்குனர்கள் அதிகம் வந்தால் பிரச்சனைகளும் அதிகம் வரும். எங்கேயாவது பெண்கள் ஒன்று கூடும் இடத்தில் சண்டை நடக்காமலா இருக்கிறது’ என கேள்வி பதில் கேள்வி எழுப்பினார். தற்போது அவரது இந்தப் பேச்சு மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஆண்களின் ஆதிக்கம் என்று கூறப்படும் சினிமாவில் தற்போதுதான் பெண் இயக்குநர்களின் ஆதிக்கம் வலுத்துவருகிறது. இப்படிப்பட்ட சூழலில் சாக்கோ இப்படி பேசியிருப்பத் முகச்சுழிப்பை ஏற்படுத்தும்வகையிலேயே இருக்கிறது.
மேலும் படிக்க | நிஜக் குந்தவையின் புகைப்படம் வைரல்: இவ்வளவு அழகா? உண்மை என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ