Best Bollywood Movies: OTT இயங்குதளங்களின் ஆதிக்கத்திற்கு பிறகு, உலக சினிமா நம் கைக்குள் வந்துவிட்டது. தற்போது நமக்கு பிடித்தமான படங்களை நாம் வீட்டில் இருந்தபடியே பார்த்து கொள்ளலாம். நெட்பிலிக்ஸ், பிரைம், ஹாட்ஸ்டார் என பல ஓடிடி நிறுவனங்கள் புதிய திரைப்படங்களை வாரம் வாரம் நமக்கு வழங்கி வருகின்றன.  அந்த வகையில் ஹாட்ஸ்டாரில் மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டிய சில படங்கள் உள்ளன.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிச்சோர் (Chhichhore)


சிச்சோர் என்பது நித்தேஷ் திவாரி இயக்கத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத், ஷ்ரத்தா கபூர் மற்றும் நவின் பாலிஷெட்டி ஆகியோர் நடித்த ஒரு பொழுதுபோக்கு திரைப்படமாகும். இந்த படம் வெளியானதும், விமர்சன ரீதியாகவும் மற்றும் வணிக ரீதியாகவும் வெற்றி  பெற்றது. ஹாஸ்டல் மற்றும் கல்லூரி வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருந்தது. பல எமோஷனல் காட்சிகளுடன் நகைச்சுவையையும் கலந்து எடுத்து இருந்தனர்.


நீர்ஜா (Neerja)


ராம் மத்வானியின் இயக்கத்தில் இருவான இந்த படம், 1986ல் கராச்சியில் பான் ஆம் ஃப்ளைட் 73 ஐ கடத்தியபோது பயணிகளைக் காப்பாற்ற முயன்ற விமானப் பயணி நீர்ஜா பானோட்டின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருந்தது.  இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சோனம் கபூர் நடித்து இருந்தார்.  இப்படம் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் பெரிய வெற்றியைப் பெற்றது.


மேலும் படிக்க | மன்சூர் அலிகானை விளாசிய த்ரிஷா, லோகேஷ் கனகராஜ், குஷ்பு.. என்னதான் விவகாரம்?


ரெய்டு (Raid)


ராஜ் குமார் குப்தா இயக்கிய க்ரைம் டிராமா திரில்லர் படம் ரெய்ட்.  அரசியல்வாதியும் தொழிலதிபருமான சர்தார் இந்தர் சிங்கிடம் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையின் அடிப்படையில் இந்த படம் எடுக்கப்பட்டது.  2020 ஆம் ஆண்டு, வெளியான ரெய்டு படம் வெற்றி படமாக அமைந்தது.  அஜய் தேவ்கன், சவுரப் சுக்லா, இலியானா டி'குரூஸ் ஆகியோர் இந்த படத்தில் நடிக்க ரித்தேஷ் ஷா கதை எழுதி இருந்தார்.


மிஷன் மங்கள் (Mission Mangal)


மிஷன் மங்கல் திரைப்படம் இயக்குனர் ஜெகன் சக்தி இயக்கத்தில் ஆர். பால்கி, நிதி சிங் தர்மா, சாகேத் கொண்டிபர்த்தி ஆகியோர் எழுத்தில் உருவான படம் ஆகும். இந்தியாவின் முதல் கிரகங்களுக்கு இடையேயான செவ்வாய் சுற்றுப்பாதை பயணமான வைத்து விண்ணிற்கு அனுப்பப்பட்ட மங்கள்யான் கதையை பற்றி எடுக்கப்பட்டுள்ளது.  இதில் அக்ஷய் குமார், வித்யா பாலன், சோனாக்ஷி சின்ஹா, டாப்ஸி பன்னு, நித்யா மேனன், கிர்த்தி குல்ஹாரி மற்றும் ஷர்மான் ஜோஷி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் பெரிய வெற்றியைப் பெற்றது.


பிரம்மாஸ்திரம் (Brahmastra)


பிரம்மாஸ்திரம் படத்திற்கு நீண்ட நாட்களாக படப்பிடிப்பு  நடந்தது. படம் கடந்த 2022ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.  புராணக் கதாபாத்திரங்களுடன் படம் ரசிகர்களை வேறொரு உலகிற்கு கொண்டு சென்றது.  இந்த படத்தில் ரன்பீர் கபூர், அலியா பட், அமிதாப் பச்சன், நாகார்ஜுனா மற்றும் பலர் நடித்து இருந்தனர்.


பாக் மில்கா பாக் (Bhaag Milkha Bhaag)


பாக் மில்கா பாக் படம் விளையாட்டு வீரரும் ஒலிம்பிக் வீரருமான மில்கா சிங்கின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. இதில் ஃபர்ஹான் அக்தர் முக்கிய வேடத்தில் நடிக்க சோனம் கபூர், திவ்யா தத்தா, மீஷா ஷஃபி, பவன் மல்ஹோத்ரா, யோகராஜ் சிங், ஆர்ட் மாலிக் மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். பிரசூன் ஜோஷி எழுத்தில் இந்த படத்தை ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா இயக்கி உள்ளார்.


மேலும் படிக்க | த்ரிஷா குறித்த அவதூறு பேச்சில் மன்சூர் அலிகான் தந்த அலட்சிய விளக்கம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு, ஆன்மீகம், ஆயிலகம் என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ