உலக அளவில் முதல் நாளே வசூல் வேட்டையாடிய படங்கள் இவையே

முதல் நாளிலேயே அதிக வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸை எகிற செய்த படங்களின் பட்டியலை இந்த தொகுப்பில் காண்போம்.

உலக அளவில் அதிக வசூலை வாரி குவித்த டாப் படங்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. இந்த டாப் படங்கள் யாருடைய படங்கள் என்பது தான் மிகவும் ஆச்சரியமான விஷயம்.

1 /6

2.0: ஷங்கரின் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டில் வெளியான 2.0 படம் முதல் நாள் வசூல் 105 கோடி  உலக அளவில் வெளியான முதல் நாளே அதிக வசூல் செய்த இந்திய படமாக சாதனை படைத்தது. இதில் ரஜினி, எமி ஜாக்சன் மற்றும் அக்ஷய் குமார் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.  

2 /6

ஜவான்: அட்லி இயக்கத்தில் அனிருத் திசையில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், பிரியாமணி என பலர் நடித்த ஜவான் திரைப்படம் முதல் நாளில் 129 கோடியே வாரி குவித்தது.  

3 /6

லியோ: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த விஜய்யின் திரைப்படம் லியோ, கடந்த அக்டோபர் 19 அன்று வெளியாகி முதல் நாளிலேயே 142 கோடி வசூல் செய்தது.  

4 /6

கேஜிஎப் 2: கேஜிஎப் 2 திரைப்படம் முதல் நாள் வசூல் 159 கோடியை அள்ளி குவித்தது. பிரசாந் நீல் இயக்கி யாஷ், சஞ்சய் தத் மற்றும் ஸ்ரீநிதி நடித்த இப்படத்திற்கு இந்திய திரையுலகில் தனி முத்திரை கிடைத்தது.   

5 /6

பாகுபலி: ராஜமௌலியின் பான் இந்தியா படமான பாகுபலி முதல் நாளில் 217  கோடி வசூல் வேட்டை செய்தது. சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதினை இந்த படம் பெற்றுள்ளது.  

6 /6

ஆர் ஆர் ஆர்: இயக்குனர் ராஜமவுலி இயக்கி ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர்  நடித்து வெளிவந்த ஆர் ஆர் ஆர் படத்தின் முதல் நாள் வசூல் மட்டுமே 223 கோடி.