சர்கார் விவகாரம்: SWAN தலைமை பதவியிலிருந்து விலகினார் பாக்யராஜ்!
தென்னிந்திய எழுத்தாளர் சங்க தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக இயக்குநர் கே.பாக்யராஜ் அறிவித்துள்ளார்!
தென்னிந்திய எழுத்தாளர் சங்க தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக இயக்குநர் கே.பாக்யராஜ் அறிவித்துள்ளார்!
சர்கார் படக் கதை சர்ச்சையை தொடர்ந்து திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவர் பதவியிலிருந்து கே.பாக்யராஜ் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.
துப்பாக்கி, கத்தி திரைப்படத்திற்கு அடுத்து மூன்றாவது முறையாக நடிகர் விஜய் மற்றும் AR முருகதாஸ் இப்படத்தில் இணைந்துள்ளனர். நடிகர் விஜய்-ன் 62-வது திரைப்படமான இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும், இந்த திரைப்படத்தின் கதை தனது கதை எனவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வருண் ராஜேந்திரன் என்பவர் மனுத்தாக்கள் செய்தார்.
தமிழகம் முழுவதும் பெரம் பரபரப்பினை ஏற்படுத்திய இந்த வழக்கில் சர்கார் பட டைட்டிலில் வருண் ராஜேந்திரனுக்கு நன்றி தெரிவிக்க பட நிறுவனம் ஒப்புக்கொண்டதை அடுத்து இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
சர்கார் விவகாரத்திற்கு பிறகு ஏற்பட்ட நெருக்கடியின் காரணமாக பதிவி விலகுவதாக அறிக்கை ஒன்றினை அவர் வெளியிட்டுள்ளார். மேலும், தான் பலமுறை கெஞ்சியும் முருகதாஸ் உடன்படாத காரணத்தால் சன் பிக்சர்ஸ் போன்ற பெரிய நிறுவனத்தின் பெரிய படமான சர்கார் கதையை வெளியே கூறினேன். இது தவறு என்று உணர்ந்து தயாரிப்பு நிறுவனத்திடம் மன்னிப்பு கேட்டுவிட்டேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்!