ஜீ தமிழ் தொலைக்காட்சியின் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்றைய காலகட்டத்தில், சினிமாவை விட, தொலைக்காட்சி சீரியல்களை அனைவரும் விரும்பி பார்க்கின்றனர். வீட்டில் வேலை பார்த்துக் கொண்டே சீரியலை பார்க்கலாம் என்பதால், பெண்களிடையே பிரபலமாகி விட்ட சீரியல்கள், தற்போது, அனைவருக்கும் போதை கொடுக்கும் பொழுதுபோக்காகவே மாறிவிட்டது என்று சொல்லலாம். தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. "அண்ணா" சீரியலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருக்கிறது.


முத்துப்பாண்டி வெங்கடேஷை அடித்து பேண்ட் சட்டையை கழட்டி உட்கார வைத்த நிலையில் ரத்னாவிடம் யார் இது என கேட்க இவர் தான் எனக்கு பார்த்து இருக்க மாப்பிள்ளை என்று விஷயத்தை சொல்கிறாள். உடனே முத்துப்பாண்டி எனக்கு தெரியாது என நடிக்கிறான். 


அதைத்தொடர்ந்து வெங்கடேஷை எழுப்பி சட்டை பேன்ட்டை போட வைத்து கான்ஸ்டபிளை டீ வாங்கி வர சொல்லி அவனை குடிக்க வைக்கிறான். வீட்டுக்கு வந்த ரத்னா முத்துப்பாண்டியால் நடந்த விஷயத்தை தன்னுடைய தங்கைகளிடம் சொல்லி அழுது கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து சண்முகம் வீட்டுக்கு வந்து என்னலே கண் கலங்கி இருக்கு என்ன விஷயம் என கேட்க தங்கைகள் அவ கல்யாணம் ஆகி இன்னொரு வீட்டுக்கு போக போறால அதனால அழறா என்று சொல்லி சமாளிக்கின்றனர். 


பிறகு சண்முகம் பக்கத்து ஊர்ல தான் இருக்க போற, தினமும் உன்னை வந்து பார்ப்பேன் மதியம் சாப்பாடு கொண்டு வந்து கொடுப்பேன் என்று சொல்கிறான். அதன் பிறகு துணி கடைக்கு போகணும் எல்லாரும் நல்ல துணியா பார்த்து எடுங்க, ஆனால் என சண்முகம் பேச்சு எடுக்க தங்கைகள் விலை கம்மியா இருக்கணும் அதானே என்று சொல்லி அவனை கலாய்க்கின்றனர். 


பிறகு இவர்கள் எல்லோரும் துணி எடுக்க கடைக்குச் செல்ல இங்கே சௌந்தர பாண்டி வீட்டில் பரணி உட்கார்ந்து லேப்டாப் பார்த்துக் கொண்டிருக்க அவளிடம் வரும் பாக்கியம் துணி கடைக்கு போகணும் என்ற விஷயத்தை சொல்ல அவள் நீயும் இந்த கல்யாண வேலையில இறங்கிட்டியா என கோபப்படுகிறாள். 


நான் வரமாட்டேன் என்று பரணி அடம் பிடித்துக் கொண்டிருக்க அங்கு வரும் சௌந்தரபாண்டி என்ன விஷயம் என்று கேட்டு பரணியை திட்டுகிறான். துணி எடுக்கிறது எல்லாம் உங்க இஷ்டம் போல எடுங்க ஆனால் மாப்பிள்ளை என் இஷ்டம் போல தான் இருக்கணும் என சொல்ல பரணி அவரைப் பார்த்து இதெல்லாம் நல்லா இல்ல என கோபப்படுகிறாள். இதனால் சௌந்தரபாண்டியன் இன்னும் கடுப்பாகி பரணியை திட்டுகிறான். 


அதன் பிறகு கடையில் தங்கைகள் விலை அதிகமான ரெட் கலர் புடவை ஒன்றை எடுத்து ரத்னாவிடம் கொடுக்க அவள் விலை அதிகமாக இருப்பதால் யோசித்துக் கொண்டிருக்க அங்கு வரும் சண்முகம் உனக்கு பிடிச்சிருந்தா எடுத்துக்க வேலையை பத்தி எல்லாம் கவலைப்படாத என்று சொல்ல தங்கைகள் சண்முகம் அண்ணனா இது என ஆச்சரியப்பட்டு திரும்பவும் அவனை கலாய்க்கின்றனர். 



பிறகு சண்முகமும் வெட்டுக்கிளியும் மென்ஸ் செக்சன் பக்கம் வந்து நல்ல துணியா இருக்கணும் அஞ்சு வருஷத்துக்கு உழைக்கணும், கிழியக்கூடாது சாயம் போகக்கூடாது, அந்த மாதிரி துணி எடுத்து காட்டுங்க என்று சொல்ல கடை ஊழியர் எவ்வளவு விலையில் எடுக்கட்டும் என்று கேட்க நூறு ரூபாயில் எடுங்க நல்லா இருந்தா ரெண்டு மூணு கூட எடுத்துக்கிறோம் என்று சொல்ல கடைக்காரர் அதிர்ச்சி அடைகிறார். 


மேலும் படிக்க | அண்ணா சீரியல் அப்டேட்: அசிங்கப்பட்ட ஷண்முகம்.. என்ட்ரி கொடுக்கும் முத்துப்பாண்டி


உள்ளே போன அவர் ஷார்ட்ஸ் எடுத்து வந்து கொடுத்து நீங்க கேட்ட காசுக்கு இதுதான் வரும் அஞ்சு வருஷத்துக்கு உழைக்கும் ஆனா இது அப்படியே இந்த பெட்டிக்குள்ளேயே வச்சு பாத்துக்கணும் என திட்டி போக சொல்கிறான். 


பிறகு சண்முகமும் வெட்டுக்கிளியும் நடந்து வந்து கொண்டிருக்கும் போது ட்ரையல் ரூமில் யாரோ ஒரு பெண்மணி அழுவது போல குரல் கேட்டு சண்முகம் யாரது என்று கேட்க கண்ணீருடன் வெளியே வரும் பரணி சண்முகத்தை கட்டிப்பிடித்து அழுகிறாள். 


பரணி எதற்காக அழுகிறாள் என தெரியாமல் சண்முகம் அதிர்ச்சியோடு நிற்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


மேலும் படிக்க |  தனுஷின் கேப்டன் மில்லர் படத்தில் இணைந்த அருண்ராஜா காமராஜ்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ