Bharathi Kannamma: பாரதி கண்ணம்மா நடிகை திடீர் மரணம்..காரணம் என்ன?அதிர்ச்சியில் சின்னத்திரை பிரபலங்கள்!
பாரதி கண்ணம்மா தொடரில் நடித்திருந்த நடிகை விஜயலட்சுமி உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.
பாரதி கண்ணம்மா தொடரில் முக்கிய வில்லியாக நடித்து வந்த நடிகை விஜய்லட்சுமி உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.
பாரதி கண்ணம்மா தொடர் :
தனியார் தொலைக்காட்சியின் பிரபல சீரியல்களுள் ஒன்று பாரதி கண்ணம்மா. நிறம் குறைவாக இருக்கும் பெண்ணை இந்த சமுதாயம் எப்படியெல்லாம் தரம் தாழ்த்தி பார்க்கிறது என்ற கதையை மையக்கருவாக வைத்து இந்த கதை முதலில் எடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, பாரதிக்கும் கண்ணம்மாவிற்கும் திருமணம் நடைபெற அதன் பிறகு அவர்கள் வாழ்வில் ஏற்பட்ட சிக்கல்கள், சண்டைகள் என பல பரிமானத்தில் இந்த கதையை கொண்டு போயிருந்தனர். இதில், ரோஷினி பிரியன் கண்ணம்மா கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தார். இவர் விலகிய பிறகு, வினுஷா தேவி என்பவர் அந்த கதாப்பாத்திரத்தில் நடித்தார். சில மாதங்களுக்கு முன்பு முடிந்த இந்த தொடரின் இரண்டாம் பாகம் இப்பாேது ஒளிபரப்பாகி வருகிறது.
மேலும் படிக்க | தாயானதை ஒரு வருடத்திற்கு பின் அறிவித்த கமல் பட நடிகை...
நடிகை விஜயலட்சுமி:
வெள்ளித்திரை நடிகர்-நடிகைகளுக்கு இருக்கும் மவுசும் மரியாதையும் பிரபலமான சீரியல்களில் நடிக்கும் சின்னத்திரை நடிகர்களுக்கும் இருக்கிறது. பாரதி கண்ணம்மா தொடரில் கண்ணம்மாவிற்கு பாட்டியாக விஜயலட்சுமி என்பவர் நடித்திருந்தார். பாரதி கண்ணம்மா தொடரின் ஆரம்ப எபிசோடுகளில் முக்கிய கதாப்பாத்திரமாக வந்த இவர், பிந்நாட்களில் காணாமல் போய் விட்டார். இவருக்கு என்ன ஆச்சு என்று தேடிய ரசிகர்கள் அதன் பிறகு அந்த சீரியலில் நடந்த அலப்பறைகளை பார்த்து இவரை மறந்தே போய்விட்டனர். இவர் சிறுதி நாட்களே அந்த சீரியலில் இருந்தாலும் சீரியல் ரசிகர்கள் மத்தியில் சிறந்த வில்லியாக நல்ல இடத்தை பெற்றிருந்தார். இந்நிலையில், நேற்று விஜயலட்சுமி உயிரிழந்து விட்டதாக தகவல்கள் வெளியாகின.
உயிரிழந்ததற்கான காரணம்:
நடிகை விஜயலட்சுமி, நேற்று உடல் நலக்குறைவு காரணமாக தூங்கிக்கொண்டிருக்கும் போதே உயிரிழந்துள்ளார். இவரது இறப்பு குறித்து வெளியாகியுள்ள தகவலில், கடந்த சில நாட்களாகவே விஜயலட்சுமி சிறுநீரக பிரச்சனையால் பாதிக்கப்பட்டதாகவும் அதற்கான சிகிச்சைகள் அவருக்கு மேற்கொள்ளப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு, விஜயலட்சுமி கழிவறையில் வழுக்கி விழுந்துள்ளார். இதில் அவரது தலையில் பலமாக அடிப்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்றுதான் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இவரது உயிரிழப்பு திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்களிடையே சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
படங்களும் தொடர்களும்:
நடிகை விஜயலட்சுமி, ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது என்ற படம் மூலம் திரையுலகிற்குள் அறிமுகமானவர். ரஜினி, கமல் உள்ளிட்ட நடிகர்கள் படத்தில் சின்ன சின்ன கதாப்பாத்திரத்தில் நடித்த இவர், 50க்கும் மேற்பட்ட தொடர்களிலும் நடித்து பிரபலமானவர். இவர், நடமமும் நன்றாகவே ஆடுவாராம். நேற்று உயிரிழந்த இவருக்கு சாகும் வரை நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து ஒரு ஊடகத்திற்கு இவரது மகள் கொடுத்துள்ள பேட்டியில், தனது அம்மாவிற்கு பாரதி கண்ணம்மா தொடருக்கு பிறகு நடிப்பதற்காக பல வாயப்புகள் வந்ததாகவும் உடல் நிலை ஒத்துழைக்காததால் அவர் நடிக்கவில்லை என்றும் தெரிவித்திருந்தார். உறவினர்களுடன் சேர்ந்து விஜயலட்சுமிக்கான இறுதி மரியாதை அனைத்தையும் செய்து விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
விஜயலட்சுமியின் நிஜ வாழ்க்கை:
நடிகை விஜயலட்சுமி சீரியலில் வில்லியாக நடித்திருந்தாலும் அவருக்கு மிகவும் நல்ல குணம் என்று அவருடன் நடித்திருந்தவர்கள் கூறுகின்றனர். விஜயலட்சுமியின் இறுதி சடங்கிலும் சில சின்னத்திரை பிரபலங்கள் கலந்து கொண்டு தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க | Thalapathy 68: வெங்கட் பிரபு கதைக்கு ஓகே சொன்ன விஜய்...? விரைவில் வரும் அப்டேட்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ