Thalapathy 68: வெங்கட் பிரபு கதைக்கு ஓகே சொன்ன விஜய்...? விரைவில் வரும் அப்டேட்!

Thalapathy 68 Venkat Prabhu: நடிகர் விஜய்யின் 67ஆவது படமான லியோவின் இரண்டாம் கட்ட பட்டப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அவரின் 68ஆவது படம் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : May 15, 2023, 06:49 PM IST
  • லியோ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்றது.
  • லியோ திரைப்படம் வரும் அக். 19ஆம் தேதி வெளியாகும் என அறிவிப்பு.
  • விஜய் பிறந்தநாளான ஜூன் 22ஆம் தேதி, அவரின் 68ஆவது படத்தின் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு.
Thalapathy 68: வெங்கட் பிரபு கதைக்கு ஓகே சொன்ன விஜய்...? விரைவில் வரும் அப்டேட்! title=

Thalapathy 68 Venkat Prabhu: நடிகை விஜய் நடிப்பில் இந்தாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான வாரிசு திரைப்படம் பல கோடி ரூபாய்களை வசூல் செய்து சாதனை படைத்தது. இருப்பினும், படத்திற்கு கலவையான விமர்சனமே கிடைத்தது. வாரிசு படத்திற்கு முன்னர் அவர் நடித்த பீஸ்ட் படமும் பெரியளவில் விமர்சனத்திற்குள்ளான நிலையைில், அடுத்த படத்தில் முழுமையான கவனத்தை விஜய் செலுத்தி வருகிறார். 

அவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என பெயரிடப்படப்பட்ட படத்தில் நடித்து வருகிறார். மாஸ்டர் படம் மூலம் வெற்றி கூட்டணியாக அறியப்பட்ட இந்த ஜோடி தற்போது லியோவில் மீண்டும் அதே மேஜிக்கை நிகழ்த்துமா என தமிழ் மட்டுமின்றி ஒட்டுமொத்த சினிமா உலகமே எதிர்பார்த்து காத்திருக்கிறது. 

இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் லியோ

படத்தில், சஞ்சய் தத், அர்ஜூன், மன்சூர் அலிகான், திரிஷா, பிரியா ஆனந்த், இயக்குநர்கள் கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின் உள்ளிட்டோர் லியோ படத்தில் நடித்து வருகின்றனர். வரும் அக். 19ஆம் தேதி லியோ திரைப்படம் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. லோகேஷ் கனகராஜின் கடந்த திரைப்படமான 'விக்ரம்' பிளாக்பஸ்டர் ஹிட் அடித்ததால், லியோ படத்தையும் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கின்றனர். 

மேலும் படிக்க | விஜய் மக்கள் இயக்க கூட்டத்தில் பிரியாணி கட்... புஸ்ஸி காலில் விழுந்த மன்ற நிர்வாகிகள்!

லியோ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நிறைவடைந்த நிலையில், தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. லியோ படத்தில் படப்பிடிப்பு விரைவில் முழுவதுமாக நிறைவடைய உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. அந்த வகையில், தற்போது தளபதி 68 படம் குறித்த பேச்சுகளும் எழத்தொடங்கிவிட்டன. zeenews.india.com/tamil/movies/leo-update-vikram-movie-actor-jaffer-sadiq-joins-in-leo-movie-vijay-lokesh-kanagaraj-442262

68ஆவது படம் யாருடன்?

வாரிசு திரைப்படத்தை போலவே விஜய் அடுத்து தெலுங்கு இயக்குநர் ஒருவருடன் இணைய உள்ளார் என முன்னர் தகவல் வெளியான நிலையில், அதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை. விஜய் தனது 68ஆவது படத்தை சன் பிக்சர்ஸ், சூப்பர் குட் பிலிம்ஸ் அல்லது தேனாண்டாள் பிலிம்ஸ் ஆகிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று தயாரிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது.

அந்த வகையில், தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது தளபதி 68 படத்தை வெங்கட் பிரபு இயக்க உள்ளதாகவும், அதனை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த திரைப்படத்திற்கு வெங்கட் பிரபுவின் ஆஸ்தான இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

பிறந்தநாளுக்கு அறிவிப்பு?

வெங்கட் பிரபு, விஜய்யிடம் கதையை கூறி ஓகே வாங்கிவிட்டதாகவும், இளைஞர்கள் விரும்பும் வகையில் மாஸ் ஆக்சன் பொழுதுபோக்கு திரைப்படமாக இதன் திரைக்கதை அமைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றனர். இந்த திரைப்படம் குறித்த அறிவிப்பு விஜய்யின் பிறந்தநாளான வரும் ஜூன் 22ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வித்தியாசமான கதை, திரைக்கதைக்கு பெயர் போன வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் தற்போது வெளியாகி உள்ள கஸ்டடி படம் கலவையான வரவேற்பை பெற்றுள்ளது. இருப்பினும், இந்த படத்திற்கு முன் சிம்புவை வைத்து இவர் எடுத்த 'மாநாடு' திரைப்படம் வேற லெவல் ஹிட் அடித்து, வெங்கட் பிரபுவுக்கு உச்சபட்ச புகழை பெற்றுத் தந்தது எனலாம். 

அப்போ மங்காத்தா 2?

நடிகர் அஜித்தின் 50ஆவது படமான மங்காத்தாவை வெங்கட் பிரபு இயக்கி, அந்த படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. அந்த படத்திற்கு பிறகு பலமுறை வெங்கட் பிரபு விஜயை வைத்து படம் எடுப்பார் என தகவல்கள் வெளியான நிலையில், தற்போதாவது அந்த கனவு நிறைவேறுமா என்ற எண்ணமும் ரசிகர்களின் மனதில் எழுந்துள்ளது. வெங்கட் பிரபு மங்காத்தா படத்தின் இரண்டாம் பாகத்தை விரைவில் எடுக்க உள்ளதாக சமீபத்தில் தகவல்கள் வெளியான நிலையில், விஜய்யின் 68ஆவது படத்தை அவர் இயக்க வாய்ப்பிருப்பதாக வெளியாகியுள்ள தற்போதைய தகவல் பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.   

மேலும் படிக்க | விஜய்யின் 'லியோ' படத்தில் நடிக்கும் பெண் வக்கீல்! வெளியானது லேட்டஸ்ட் அப்டேட்!
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News