"குரங்கு பொம்மை" படத்துக்காக சிறந்த துணை நடிகருக்கான விருது பாரதிராஜாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ் சினிமாவில் மறுமலர்ச்சியை ஏற்படுத்திய இயக்குநர் பாரதிராஜா, இப்போது நடிகராக வலம் வருகிறார். ’ரெட்டை சுழி’, ’பாண்டிய நாடு’ போன்ற திரைப்படங்கள் வாயிலாக தன்னையொரு சிறந்த நடிகராகவும் அடையாளம் காட்டியிருக்கும் பாரதிராஜா, சமீபத்தில் வெளிவந்த "குரங்கு பொம்மை" என்கிற படத்தில் நாயகன் விதார்த்துக்கு அப்பாவாக நடித்திருந்தார். 


இந்நிலையில், கனடாவில் உள்ள முக்கிய பொழுதுபோக்கு குழுக்களில் ஒன்றான ’BLUE SAPPHIRE’ என்கிற அமைப்பு, ‘டொரேண்டோ தெற்காசிய திரைப்பட விருதுகள்’ என்கிற பெயரில் தென்னிந்திய மொழிப்படங்களுக்கு விருதுகளை வழங்குகிறது. சர்வேதச அளவில் ஆன்லைன் வாக்கெடுப்பு முறையில் விருதுக்கான கலைஞர்களை தேர்தெடுக்கின்றனர். அதன்படி கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான தமிழ் மற்றும் மலையாளம் இரண்டு மொழிப் படங்களுக்கும் சேர்த்து மொத்தம் 25 விருதுகளை அறிவித்துள்ளனர்.


இதில் ‘விக்ரம் வேதா’, ‘அருவி’, ‘அறம்’, ‘குரங்கு பொம்மை’ என தமிழின் மிக முக்கியமான படங்களுக்கிடையே கடுமையான போட்டி இருந்தது. இதில் சிறந்த தமிழ்த் திரைப்படமாக ‘குரங்கு பொம்மை’ தேர்வாகி உள்ளது. 


அத்துடன், இந்தப் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய பாரதிராஜாவுக்கு, சிறந்த துணைநடிகருக்கான விருது  அறிவிக்கப்பட்டுள்ளது.