மீண்டும் ஹாட்ஸ்டாருக்கு ஆப்பு வைத்த ஜியோ சினிமா... இந்த முறை எப்படி தெரியுமா?
Jio Cinema Warner Bros Agreement: சமீபத்தில், ஹாட்ஸ்டார் உடனான ஒப்பந்தத்தில் இருந்து HBO விலகிய நிலையில், நீண்ட கால ஒப்பந்தத்தின் மூலம் இனி HBO தொடர்கள், படங்கள் அனைத்தும் ஜியோ சினிமாவில் ஒளிப்பரப்பப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
Jio Cinema Warner Bros Agreement: வார்னர் பிரதர்ஸ், டிஸ்கவரி+ ஆகியவற்றுடன் இந்தியாவின் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஸ்ட்ரீமிங் தளம், ஜியோ சினிமா ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்மூலம், ஹாலிவுட் திரைப்படங்கள், வெப்-சீரிஸ் ஆகியவற்றை தனது தளத்தில் கொண்டு வந்து, நெட்பிளிக்ஸ் மற்றும் அமேசானுக்கு எதிராக போட்டியிட ஒரு பெரும் செயல்திட்டத்தை தொடங்கியுள்ளது.
இனி கேம் ஆப் த்ரோன்ஸ் இதில்...
ரிலையன்ஸின் வியாகாம் 18 இடையேயான ஒப்பந்தத்தால், வார்னர் பிரதர்ஸ் மற்றும் அதன் HBO உள்ளடக்கம் ரிலையன்ஸின் ஜியோசினிமா பயன்பாட்டில் கிடைக்கும். இதில் பிரபலமான திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளான Succession, கேம் ஆஃப் த்ரோன்ஸ், லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ் மற்றும் ஹாரி பாட்டர் தொடர்கள் ஆகியவை அடங்கும் என்று இந்த நிறுவனங்கள் வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம், இந்த ஒப்பந்தத்தை நேரடியாக அறிந்த ஆதாரங்களின் அடிப்படையில் நிறுவனங்களின் அறிக்கைக்கு முன்னதாகவே அறிவித்தது. இருப்பினும், அந்த ஆதாரங்களில் ஒப்பந்தத்தின் நிதி விவரத்தை வெளியிடவில்லை. ஆனால், நிறுவனங்களில் அறிக்கையில்,"புதிய பல ஆண்டு ஒப்பந்தம்" என்று விவரிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் அடுத்த மாதம் முதல் பயன்பாட்டுக்கு வரும் என தெரிகிறது.
தெற்காசிய சந்தைக்கான திட்டம்
வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்திற்கான இந்தியா, தென்கிழக்கு ஆசியா மற்றும் கொரியாவின் தலைவர் கிளெமென்ட் ஷ்வெபிக் கூறுகையில், இந்த ஒப்பந்தம் தெற்காசிய சந்தையில் நிறுவனத்தை வலுவாக்கும் முயற்சிகளில் இது ஒரு பகுதியாகும், ஏனெனில் இது அதன் பிராந்திய வணிகத்தின் அளவை மேலும் வலுப்படுத்தும்.
மேலும் படிக்க | ஜியோ சினிமாவில் இந்த 10 சூப்பர் ஹிட் படங்களை இலவசமாக பார்க்கலாம்!
இந்த ஒப்பந்தத்தில் அடிப்படையில், வார்னர் நிறுவனத்தின் பெரும்பாலான பிரத்யேக படங்களும், சிரீஸ்களும் ஜியோ சினிமா பிளாட்ஃபார்மில் இனி காணக்கிடைக்கும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமேசான் பிரைம் வீடியோ மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் உள்ளிட்ட மற்ற இந்திய போட்டியாளர்களுக்கு வார்னர் தனது பிரபலமான படங்கள், சிரீஸ்கள் பெரும்பாலானவற்றை வழங்க முடியாது என்று கூறப்படுகிறது.
ஐபிஎல் ஒளிப்பரப்பு உரிமை
இது ஒரு ஆழமான பிரத்யேக ஏற்பாடாகும். இதனால் ஜியோ சினிமாவில் மட்டும்தான் வார்னர், HBO ஆகியவற்றின் படங்களை பார்க்க முடியும் என்ற நிலை உருவாகும் என்று கூறப்படுகிறது. தற்போது ஐபிஎல் தொடரை இலவசமாக ஒளிப்பரப்புவதால், பிரபலமடைந்த ஜியோ சினிமா, இந்த ஒப்பந்தத்தின் மூலம் மேலும் பிரபலமடையும்.
வியாகாம் 18 ஐபிஎல் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையை 2023 முதல் 2027 வரை சுமார் 2.9 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வென்றது. இந்த ஓடிடி உரிமையை டிஸ்னி ஹாட்ஸ்டார் முன்பு வைத்திருந்தது. வியாகாம் 18-இன் பங்குதாரர்களில் ரிலையன்ஸ், பாரமவுண்ட் குளோபல் மற்றும் போதி ட்ரீ ஆகியவை அடங்கும். இது ஜேம்ஸ் முர்டோக் மற்றும் முன்னாள் ஸ்டார் இந்தியா நிர்வாகி உதய் சங்கர் ஆகியோரின் கூட்டு முயற்சியாகும். போதி ட்ரீ நிறுவனம் சமீபத்தில் வியாகாம்18 இல் $528 மில்லியன் முதலீடு செய்தது.
கடும் போட்டி
HBO-வின் பல சிறந்த படங்கள், சிரீஸ்கள் முன்பு ஹாட்ஸ்டாரில் கிடைத்தன. Succession, Game Of Thrones உள்ளிட்ட தொடர்கள், கடந்த மார்ச் 31ஆம் தேதி வரை டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் இந்தியாவில் ஒளிபரப்பப்பட்டது. மார்ச் 31ஆம் தேதியோடு, ஹாட்ஸ்டார், HBO இடையேயான ஒப்பந்தம் காலாவதியானது.
ஜியோசினிமா நெட்பிளிக்ஸ், அமேசான் உள்ளிட்ட போட்டியாளர்களுடன் தீவிரமாக போட்டியிட்டு, முன்னணியில் வர முற்படுகிறது. ஆனால் ஜியோசினிமா ஒரு சிறிய பிளேயர். மீடியா பார்ட்னர்ஸ் ஏசியாவின் கூற்றுப்படி, வீடியோ-ஆன்-டிமாண்ட் சந்தையில் நெட்பிளிக்ஸ் மற்ற போட்டியாளர்களை விஞ்சுகிறது. 2021 ஆம் ஆண்டில் வருவாயில் 39% பங்கை மேலும் படிக்க | பொன்னியின் செல்வன் முதல் விடுதலை வரை! OTT ரிலீஸ் தேதி முழு விவரம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ