ஜவான் திரைப்படத்தின் முன்னோட்ட வீடியோ எப்போது? மாஸ் அப்டேட் இதோ
இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ‘ஜவான்’ படத்தின் பிரிவ்யூ நாளை வெளியாயுள்ளதாக படக்குழுவினர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
நடிகர் ஷாருக்கானின் 'ஜவான்' படத்தின் முக்கிய அப்டேட்: இணையம் எங்கும் “ஜவான்” திரைப்படம் பற்றிய பேச்சு தான் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. ஷாருக்கானைத் திரையில் காணும் ரசிகர்களின் ஆவல் என்றுமே குறைவதில்லை. இந்த உணர்வுதான் அவரது படங்களுக்கான வியாபாரத்தை எப்போதும் உயர்த்திக் கொண்டே வருகிறது. அவரது ஜவான் படமும் இதற்கு விதிவிலக்கல்ல. இன்னும் டிரெய்லரே வெளியாகாத நிலையில், தற்போது நாளை ‘ஜவான்’ படத்தின் ஒரு சிறிய முன்னோட்டத்தை (Prevue) காலை 10.30 மணிக்கு படக்குழு வெளியிடுகிறது. இதில் ட்ரெய்லரில் உள்ள சில காட்சித் துணுக்குகள் இடம்பெற்றிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை படத்தின் இயக்குனர் அட்லீ மற்றும் நடிகர் ஷாருக்கான் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
நடிகர் ஷாருக்கான் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தை இயக்குனர் அட்லீ குமார் இயக்கியுள்ளார். இதை ஷாருக்கின் தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் கௌரி கான் ஆகியோர் தயாரித்துள்ளனர். ஜவான் திரைப்படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில் கதாநாயகியாக நயன்தாரா களமிறங்க, மிரட்டலான வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கிறார். மேலும் பிரியாமணி, சானியா மல்ஹோத்ரா, யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் ஜவான் படத்தில் தளபதி விஜய் கௌரவ வேடத்தில் நடித்திருக்கிறார்.
மேலும் படிக்க | 100 மில்லியன் பார்வைகளை கடந்த சலார் டீசர்... கையோடு வெளியான ட்ரெய்லர் அப்டேட்
ஜவான் திரைப்படத்திற்கு GK.விஷ்ணு ஒளிப்பதிவில், ரூபன் படத்தொகுப்பு செய்ய, அனிருத் இசையமைக்கிறார். இயக்குனர் அட்லி மற்றும் நயன்தாராவிற்கு மட்டுமல்லாது ஒளிப்பதிவாளர் விஷ்ணு, படத்தொகுப்பாளர் ரூபன் மற்றும் இசையமைப்பாளர் ராக் ஸ்டார் அனிருத்துக்கும் ஜவான் திரைப்படம் தான் முதல் ஹிந்தி படமாகும். ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என PAN INDIA படமாக ஜவான் படம் ரிலீஸாகவுள்ளது. முன்னதாக ஜவான் திரைப்படம் வரும் செப்டம்பர் 7 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜவான் படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக இப்படத்தின் தியேட்டர் வெளியீடு அல்லாத உரிமம் 250 கோடிக்கு விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. இதனால் ஷாருக்கானின் அதிரடி நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள டிரெய்லர் மேலும் பல சாதனைகள் படைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
ஜவான் படத்தை தவிர தற்போது நடிகர் ஷாருக்கான் இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் உருவாகும் டங்கி திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் சல்மான் கான் நடிப்பில் அதிரடி ஆக்சன் திரைப்படமாக தயாராகும் டைகர் 3 படத்தில் முக்கியமான கௌரவ வேடத்தில் ஷாரூக்கான் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | எல்லாம் ஓகே ஆனால் இதுக்கு மட்டும் நோ - ராகுல் ப்ரீத் சிங் ஓபன் டாக்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ