எல்லாம் ஓகே ஆனால் இதுக்கு மட்டும் நோ - ராகுல் ப்ரீத் சிங் ஓபன் டாக்

காதலில் ஏமாற்றுவதை ஏற்றுக் கொள்ள மாட்டேன் என நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் தெரிவித்துள்ளார்

 

1 /7

நடிகர் கார்த்தியின் நடிப்பில் வெளிவந்த, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ திரைப்படத்தில் கதாநாயகியாய் நடித்தவர் ரகுல் ப்ரீத் சிங். இவர், என்ஜிகே, தேவ், ஸ்பைடர், தடையற தாக்க உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனங்களை வெகுவாகக் கவர்ந்தவர்.  

2 /7

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய அவர், காதலில் பொய் இருப்பதை தன்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது என்று கூறி இருக்கிறார் ரகுல் ப்ரீத் சிங்.   

3 /7

“காதலில், என்னைப் பொறுத்தவரை ஓர் உறவின் ஒப்பந்தத்தை முறிப்பது பொய் என்று நினைக்கிறேன். நெருக்கமான உறவில் பேச முடியாத விஷயம் என்று எதுவும் கிடையாது. காதலுக்கு முன்பு நண்பர்களாக இருக்கும் அந்த உறவை நான் நம்புகிறேன்.   

4 /7

காரணம், அந்த உறவில் காதலிக்கும் இருவரும் என்ன வேண்டுமானாலும் பேசலாம். அப்போது அவர்கள் இருவரிடையே மறைப்பதற்கும் பொய் சொல்வதற்கும் எந்த தயக்கமும் இருக்காது. அப்படியே தவறு செய்தாலும் அதை மறைவின்றி பேசி மனம் விட்டுப் பழகலாம்.  

5 /7

தவறு செய்வது இயல்புதானே. நாம் எல்லோரும் மனிதர்கள்கள். ஆனால், காதலில் செய்த தவறை சொல்லாமல் மறைப்பதுதான் பெரும் பிரச்னை. காதலில் பொய் பேசுவதையும், எமோஷனலாகப் பேசி ஒருவரை மற்றவர் ஏமாற்றுவதையும் என்னால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவே முடியாது.   

6 /7

இன்றைய காலகட்டத்தில் காதல் என்ற வார்த்தையை பலரும் தவறாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். சில நேரம் நீங்கள் நேசிக்கும் ஒருவரை அவர்கள் விரும்புவதைச் செய்ய அனுமதிக்காமல், உங்களுக்குப் பிடித்ததை அவர்கள் மீது திணித்து அதைத்தான் நீ செய்ய வேண்டுமெனக் கட்டாயப்படுத்துவது வழக்கத்தில் உள்ளது.   

7 /7

இதனால் அவர்களை வளர விடாமல் தடுக்கிறார்கள். காதலிக்கும் ஒருவரை மென்மேலும் வளரச் செய்வதுதான் உண்மையான காதலாக இருக்க முடியும்” என்று அவர் காதல் குறித்துப் பேசி இருக்கிறார்.