Dasara OTT: ரூ. 110 கோடி வசூல் செய்த தசரா... ஓடிடியில் எப்போது தெரியுமா?
Dasara OTT Release: தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியாகி பெரும் வசூலை குவித்த தசரா திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.
Dasara OTT Release: நேச்சுரல் ஸ்டார் என தென்னிந்திய ரசிகர்களால் அழைக்கப்படும் நானியின் நடிப்பில் சமீபத்தில் வெளியான தசரா படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். தசரா திரைப்படம் கடந்த மார்ச் 30 அன்று திரையரங்குகளில் வெளியானது. இத்திரைப்படம், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் இருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.
மேலும், ஓடிடியில் எப்போது வெளியாகும் என மிகுந்த எதிர்பார்ப்பும் இருந்தது. இதையடுத்து, தசரா படத்தின் ஓடிடி வெளியீடு இம்மாதம் வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர்கள் அறிவித்தனர். திரையரங்குகளில் தெலுங்கு, கன்னடம், தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகள் வெளியாகின.
மேலும் படிக்க | பிரியங்கா மோகனுக்கு செம்ம அதிர்ஷ்டம்.. பவர் ஸ்டாருக்கு ஜோடியாகிறாரா?
இந்நிலையில், படம் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் நிறுவனமான நெட்பிளிக்ஸில் வரும் ஏப். 27ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தசரா தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் உட்பட 4 மொழிகளில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெட்பிளிக்ஸ் சவுத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில்,"இந்த ஆண்டு தொடக்கத்தில் தசரா வரவிருப்பதால் பட்டாசுகளை வெடிக்க வேண்டிய நேரம் இது. தசரா ஏப்ரல் 27ஆம் தேதி தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னட மொழிகளில் நெட்பிளிக்ஸில் வருகிறது.
நானி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள தசரா நடிகர்கள், கீர்த்தி சுரேஷ், தீக்ஷித் ஷெட்டி, ஷைன் டாம் சாக்கோ, சமுத்திரக்கனி, சாய் குமார் மற்றும் பூர்ணா ஆகியோரும் நடித்திருந்தனர். தசரா பாக்ஸ் ஆபிஸில் படம் ரூ. 100 கோடிக்கு மேல் வசூல் சாதனையை படைத்தது. தசரா திரைப்படம் ரூ.65 கோடிக்கு மேல் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு உலகம் முழுவதும் ரூ.110 கோடிக்கு மேல் வசூல் செய்தது.
படத்தின் வரவேற்பு குறித்து பேசிய நானி, "படத்திற்கு கிடைத்த வரவேற்பு மிகவும் அபாரமாக உள்ளது. இது மிகப்பெரியதாக உள்ளது. சமூக வலைதளங்களில் தசரா பற்றி பரபரப்பாக பேசப்படுகிறது. எதிர்பார்ப்புகள் அதிகம் என்பது எனக்குத் தெரியும். நாங்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வோம் அல்லது அதற்கும் மேலே செல்வோம் என்று நான் உணர்கிறேன்" என்றார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ