பிரியங்கா மோகனுக்கு செம்ம அதிர்ஷ்டம்.. பவர் ஸ்டாருக்கு ஜோடியாகிறாரா?

பிரியங்கா மோகன் ஓஜி படத்தில் இணைந்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. இப்படத்தை சுஜீத் இயக்கவுள்ளார். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 20, 2023, 11:58 AM IST
  • ’டாக்டர்’ திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை பிரியங்கா மோகன்.
  • ஜெயம் ரவி நடித்து வரும் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.
பிரியங்கா மோகனுக்கு செம்ம அதிர்ஷ்டம்.. பவர் ஸ்டாருக்கு ஜோடியாகிறாரா? title=

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் மற்றும் டாக்டர் ஆகிய இரு படங்களும் பெரும் வெற்றியை பெற்றன. இரு படங்களும் 100 கோடி ரூபாய் பாக்ஸ் ஆஃபீஸில் சேர்ந்து சிவகார்த்திகேயனின் மார்க்கெட்டை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் சென்றன. இந்த இரு படங்களிலும் அவருக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடித்தார். சிவகார்த்திகேயனுக்கும் பிரியங்கா அருள் மோகனுக்கும் கெமிஸ்டிரி சூப்பராக செட் ஆனதால், இரு படங்களும் ரசிகர்களின் மனதையும் கவர்ந்திருந்தன. இதனால் பிரியங்கா அருள் மோகனுக்கும் தனி ரசிகர் பட்டாளம் உருவானது.

அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்ததால் அவருக்கான மார்க்கெட்டும் கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் ஜெட் வேகத்தில் எகிறியது. இதனால் சூர்யாவுடன் சேர்ந்து எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்த பிரியங்கா அருள் மோகன், தற்போது ஜெயம் ரவியுடன் கூட்டணி அமைத்திருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

மேலும் படிக்க | பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை விட்டு விலகும் அடுத்த முக்கிய நடிகர்..

அதேபோல் தற்போது இயக்குனர் மாதேஸ்வரன்-தனுஷ் கூட்டணியில் கேப்டன் மில்லர் என்ற திரைப்படம் உருவாக இருக்கிறது. மில்லர் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடிக்கிறார். மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தற்போது இவர்  மற்றொரு படத்தில் கமிட்டாகி உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி இவர் பவன் கல்யாண் நடிக்கும் அடுத்த திரைப்படத்தில் நாயகியாக நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பவன் கல்யாண் நடிப்பில் உருவாகும் OG படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.

மேலும் இது தொடர்பாக் நடிகை பிரியங்கா மோகன் தனது சமூக வலைத்தளத்தில் தகவலை வெளியிட்டு உறுதி செய்துள்ளார்.

மேலும் படிக்க | சமந்தா, ராஷ்மிகாவை விட அதிகளவில் சம்பளம் வாங்கும் புதிய நடிகை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News