அமேசான் திரைப்படங்களில் வணிக விஷயங்களுக்காக சமரசம் இல்லை! நடிகர் சூர்யா ஓபன் டாக்...
கொரோனா லாக்டவுனில் நூற்றுக்கணக்கானவர்களுக்கு வேலை கொடுக்கும் வாய்ப்பை கொடுத்த அமேசான் பிரைம் வீடியோவுடன் ஒப்பந்தத்தைத் தொடர்கிறார் நடிகர் சூர்யா...
அமேசான் பிரைம் வீடியோ இந்தியா நிறுவனத்துடனான தற்போதைய ஒப்பந்தத்தைத் தொடரவிருப்பதாக நடிகர் சூர்யா கூறுகிறார். இதன் பின்னணியைப் பற்றி அவரே ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.
சூர்யாவின் தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனமான 2D என்டர்டெயின்மென்ட் தயாரித்த “பொன்மகள் வந்தாள்” திரைப்படம் நேரடியாக அமேசானில் வந்தது.
அதேபோல், நடிகர் சூர்யாவின் (Actor Suriya) “சூரரைப் போற்று” திரைப்படமும் அமேசானில் வெளியானது.
மே 2020 இல், கோவிட்-19 தொற்றுநோயின் முதல் அலை உச்சத்தில் இருந்தபோது திரையரங்குகள் மூடியிருந்த நிலையில், தனது மனைவி ஜோதிகா நடித்த திரைப்படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட்டது சூர்யாவின் முன்முயற்சியாக இருந்தது. இந்த முயற்சி சரியான முடிவு என்பதும் நிரூபணமானது.
ஆகஸ்ட் 2021 இல், நேரடியாக டிஜிட்டலில் தமிழ் திரைப்படங்களை வெளியிடுவதற்காக 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் அமேசான் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தது. தொற்றுநோய் பரவத் தொடங்கியபோது, 2D தயாரிப்பில் ஆறு திரைப்படங்கள் இருந்தன.
அந்த கட்டத்தில், நூற்றுக்கணக்கானவர்களுக்கு வேலை கொடுக்கும் வாய்ப்பை தவறவிடவில்லை என்பதால் பல முன்முயற்சிகளை சூர்யா எடுத்துள்ளார்.
ALSO READ | ஆஸ்காரின் யூடியூப் சேனலில் இடம்பிடித்த சூர்யாவின் 'ஜெய் பீம்'!
தற்போது, மொழித் தடையை மீறி, ஐந்து மொழிகளில் திரைப்படங்களை வெளியிட முடிந்த நிலையில், அமேசான் திரைப்படங்கள் எல்லைகளைத் தாண்டிச் செல்ல முடியும் என்பதை உணர்த்துவதாக சூர்யா நம்புகிறார்.
அமேசானில் திரைப்படங்களை வெளியிடும்போது சில வணிக விஷயங்களை திணிக்க வேண்டிய அவசியம் இல்லை, ஸ்டண்ட் காட்சிகளை நீக்கியதில் நிம்மதி என்று சொல்லும் சூர்யா, அமேசானுடனான உறவு தொடரும் என்கிறார்.
அமேசானில் நிறைய வாய்ப்புகள் இருக்கிறது என்றும், வலைதொடர் மற்றும் திரைப்படங்கள் என அமேசானுக்கும், தங்களுக்குமான உறவு தொடரும் என்றும் சூர்யா சொல்கிறார்.
ஆனால், எல்லா படைப்புகளிலும் தான் இருக்க மாட்டேன் என்பதையும் தெளிவுபடுத்திவிட்டார் நடிகர் சூர்யா.
2டியின் அமேசான் ஒப்பந்தத்தில் டி.ஜே. ஞானவேல் இயக்கிய “ஜெய் பீம்” (Jai Bhim) படத்தில் சூர்யா காவல்துறையினரால் துன்புறுத்தப்படும் பழங்குடி தம்பதிகளுக்கு உதவும் வழக்கறிஞராக நடித்துள்ளார். இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
ALSO READ | ஆஸ்கர் தகுதி பட்டியலில் சூர்யாவின் ஜெய் பீம்; தட்டித் தூக்குவாரா?
அமேசானில் அதிகம் பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாக சாதனை புரிந்துள்ள ஜெய்பீம் திரைப்படம், சமீபத்தில் ஆஸ்கர் யூடியூப் (Oscar Youtube) தளத்தில் ஜெய் பீம் பட காட்சி இடம்பெற்று வரலாறு படைத்தது.
தற்போது ஆஸ்கர் விருதுக்கான (Oscar Award) போட்டியிலும் சூர்யாவின் ஜெய் பீம் திரைப்படம் சென்றுள்ளது. ஆஸ்கர் விருதுகான போட்டியில் உலகெங்கிலும் இருந்து 276 படங்கள் தேர்வாகி உள்ளன.
அதில் சூர்யாவின் ஜெய் பீம் மற்றும் மோகன்லாலின் மரைக்காயர் ஆகிய 2 இந்திய படங்கள் இடம்பெற்று உள்ளன. இதில் சிறந்த நடிகர் பிரிவுக்கான போட்டியில் சூர்யாவின் பெயரும் இடம்பெற்றுள்ளது .
தமிழ்நாட்டின் பழங்குடி மக்களின் அவலத்தை மையமாகக் கொண்ட சூர்யாவின் ஜெய் பீம் திரைப்படம் சமூக மாற்றத்தின் முக்கியமான சரித்திரத்தை பதிவு செய்த திரைப்படமாக மாறியுள்ளது.
ALSO READ | எதற்கும் துணிந்தவன் படத்திற்கு தணிக்கை குழு அளித்த சான்றிதழ்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR