எதற்கும் துணிந்தவன் படத்திற்கு தணிக்கை குழு அளித்த சான்றிதழ்!

சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.   

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 18, 2022, 02:56 PM IST
  • ET படத்தில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்துள்ளதால் U/A சான்றிதழ் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
  • இமான் இசையில் ஏற்கனவே இந்த படத்தில் இருந்து வெளிவந்த பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
எதற்கும் துணிந்தவன் படத்திற்கு தணிக்கை குழு அளித்த சான்றிதழ்!  title=

சூர்யா பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள எதற்கும் துணிந்தவன் (Etharkum thuninthavan) படத்திற்கு தணிக்கை குழு யூ/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.  இந்த படத்தில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்துள்ளதால் இந்த சான்றிதழ் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.  மேலும் இப்படம் 2hrs 31mins கால அளவையும் கொண்டுள்ளது. இப்படத்தில் வினய் ராய் , பிரியங்கா அருள் மோகன், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி, M.S. பாஸ்கர்ஜெயப்பிரகாசு, தேவதர்சினி, சுப்பு பஞ்சு அருணாச்சலம், இளவரசு ஆகியோர் நடித்துள்ளனர்.  இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 

ALSO READ | 'பீஸ்ட்' படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட நடிகை!

கடைசியாக சூர்யா நடிப்பில் வெளிவந்த சூரரைப்போற்று, ஜெய்பீம் போன்ற படங்கள் OTT-யில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.  இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருந்தாலும் திரையரங்கில் வெளியாகாமல் போனது அனைவருக்கும் மிகுந்த வருத்தத்தை அளித்தது.  இன்னிலையில் எதற்கும் துணிந்தவன் படம் பிப்ரவரி மாதம் திரையரங்கில் வெளியாக உள்ளது.  ஏற்கனவே பிப்ரவரி 4ஆம் தேதி இப்படம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்த நிலையில் தற்போது உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக வெளியீடு தேதி தள்ளிப் போகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இமான் இசையில் ஏற்கனவே இந்த படத்தில் இருந்து வெளிவந்த வாடா தம்பி, உள்ளம் உருகுதய்யா என்ற இரண்டு பாடல்களும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.  பொங்கல் தினத்தை முன்னிட்டு இப்படத்திலிருந்து மூன்றாவது பாடல் சமீபத்தில் வெளியானது.  தன்னுடைய படங்களுக்கு பாடல் வரிகள் எழுதி வந்த சிவகார்த்திகேயன் சூர்யாவின் இந்த பாடலுக்கும் வரிகள் எழுதியுள்ளார்.  சும்மா சுர்ருன்னு எனத் தொடங்கும் இந்த பாடல் முதல் முறை கேட்ட உடனேயே பிடித்து விடும் அளவிற்கு இருந்தது. அடுத்தபடியாக இப்படத்தின் டிரெய்லர்காக அனைவரும் காத்து கொண்டுள்ளனர். 

இந்தப் பட வேலைகளை முடித்துவிட்டு சூர்யா அடுத்ததாக பாலா அல்லது சிறுத்தை சிவாவுடன் புதிய படத்தில் இணைய அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.  சமீபத்தில் தனது குடும்பத்துடன் சூர்யா பொங்கல் கொண்டாடிய புகைப்படம் இணையத்தில் வைரல் ஆனது.

 

ALSO READ | குக் வித் கோமாளி சீசன் 3 தொடங்கும் தேதி அறிவிப்பு!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News