ஷங்கர் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்து கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படம் 'அந்நியன்'. இந்த ஹிட் படம் தற்போது இயக்குனர் ஷங்கர் பாலிவுட்டில் ரீமேக் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இயக்குநர் ஷங்கர் (Shankar) '2.0 திரைப்படத்திற்கு பிறகு கமலை வைத்து 'இந்தியன் 2' (Indian 2) திரைப்படத்தை இயக்கும் வேளைகளில் ஈடுபட்டு வந்தார். லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படம் பல்வேறு சிக்கல்களால் இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது. இந்தப் படத்துக்குப் பின் ராம் சரண் நடிக்கும் படம் ஒன்றை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார் ஷங்கர். தில் ராஜு தயாரிக்கும் 50-வது படமாக இது உருவாகிறது. பெரும் பொருட்செலவில் தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் என அத்தனை பிரதான மொழிகளிலும் இந்தப் படத்தை வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது.


ALSO READ | அஜித், ஷங்கர் இணைய அதிரடியாய் வரவுள்ளதா ‘முதல்வன்-2’? Latest Update!


இந்த இரண்டு படங்களுக்குப் பின், ரன்வீர் சிங் (Ranveer Singh) நடிக்கும் இந்திப் படமொன்றை ஷங்கர் இயக்குகிறார். இதற்கான பேச்சுவார்த்தை இறுதியடைந்துள்ளது. இந்தப் படம் தமிழில் விக்ரம் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற 'அந்நியன்' (Anniyan) படத்தின் ரீமேக் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை பென் ஸ்டுடியோஸ் சார்பில் டாக்டர் ஜெயந்திலால் காடா தயாரிக்கிறார்.


 



 


இந்நிலையில் இயக்குநர் ஷங்கர் 'அந்நியன் 'படத்தை இந்தியில் ரீமேக் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியில் ரீமேக் ஆகும் 'அந்நியன்' திரைப்படத்தி ரன்வீர் சிங் நடிப்பார். இப்படத்தின் படப்பிடிப்பு 2022 ஆம் ஆண்டு மத்தியில் தொடங்கும் என்று கூறப்படுகிறது.


அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR