பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில், மதன் கார்க்கி எழுத்தில் உருவாகியுள்ள காதல் கலந்த நகைச்சுவை படம் ஹே சினாமிகா. இந்த திரைப்படத்தில் துல்கர் சல்மான், காஜல் அகர்வால், அதிதி ராவ், ஷியாம் பிரசாத் போன்ற பலர் நடித்துள்ளனர். இப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் குளோபல் ஒன் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. மேலும் இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்து உள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2015 ஆம் ஆண்டில்ல் வெளியான ஓ காதல் கண்மணி படத்திலுள்ள ஒரு பாடலின் வரி தான் இப்படத்திற்கு  'ஹே சினாமிகா' என்று தலைப்பாக வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2020 ம் ஆண்டு இப்படத்திற்கான பணிகள் தொடங்கப்பட்டு, சென்னையில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இப்படத்தின் கலர்ஃபுல்லான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே அதிக கவனத்தை ஈர்த்தது.


மேலும் படிக்க | நயன்தாராவுக்காக காத்திருக்கும் விக்னேஷ் சிவன்..!



இந்த நிலையில் நேற்று இந்த திரைப்படத்திற்கு தணிக்கைக் குழு யு சான்றிதழ் வழங்கியுள்ளதாக படத்தின் இயக்குனர் பிருந்தா போஸ்டர் முலமாக வெளியிட்டு இருந்தார். மேலும் இந்த திரைப்படம் பிப்ரவரி 25 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு ஏற்கெனவே அறிவித்திருந்த நிலையில் தற்போது இந்த திரைப்படம் மார்ச் 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.


 



 


இந்த திரைப்படத்திற்கு பாடலாசிரியர் மதன் கார்க்கி திரைக்கதை மற்றும் பாடல்கள் எழுதியுள்ளார். மேலும் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். பிரீத்தா ஜெயராமன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராதா ஸ்ரீதர் படத்தொகுப்பு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | இரண்டு பாகங்களாக வெளிவரும் விக்ரமின் துருவ நட்சத்திரம்?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR