விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக 5 சீசன்ளை நிறைவு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சி தொடங்கியபோது இருந்த எதிர்ப்பு, ஆண்டுகள் செல்ல செல்ல பலருக்கும் எதிர்பார்ப்பாக மாறியது. நடந்து முடிந்த சீசனில் ராஜூ வாகை சூடினார். தாமரைக்கு பெரிய அளவில் வரவேற்பு இருந்தது. நாடகப் பின்னணியில் இருந்து வந்த அவர், போட்டியாளர்களுடன் சரிநிகராக விளையாடிய விதம் அனைவரையும் ஈர்த்தது. மேலும், அண்ணாச்சி, சிபி, ஐக்கி பெர்ரி ஆகியோரும் மக்களின் ஆதரவைப் பெற்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | Bigboss: முன்னாள் டைட்டில் வின்னரை அழைக்காத பிக்பாஸ் டீம்..! ஏன்?


ஒட்டுமொத்த வீடே தனக்கு எதிராக இருந்தாலும், தான் எடுத்த முடிவில் தைரியமாக நின்று விளையாடிய பாவனி 3வது இடத்தை பிடித்து அசத்தினார். போட்டியின் பாதியில் வந்தாலும், இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசர வைத்தவர் அமீர். இவ்வாறு பல்வேறு சுவாரஸ்யங்களை உள்ளடக்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தது, பலருக்கும் வருத்தமாக இருந்தது. ஆனால், அந்த வருத்தத்தை போக்கும் வகையில், பிக்பாஸ் நிகழ்ச்சி பிக்பாஸ் அல்டிமேட் என்ற டைட்டிலில் மீண்டும் களமிறக்கப்பட உள்ளது.


ALSO READ | பிக்பாஸில் ’ஹிப்ஹாப் ஆதி’ - போட்டியாளர்கள் மகிழ்ச்சி


டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் மட்டுமே ஒளிபரப்பாக உள்ள இந்த ஷோவில், கடந்த 5 சீசன்களில் போட்டியாளர்களாக கலந்து கொண்டவர்கள் மீண்டும் களமிறக்கப்பட உள்ளனர். 24 மணி நேரமும் பிக்பாஸ் அல்டிமேட் ஒளிபரப்பாக உள்ளது. இந்நிலையில், போட்டியாளர்களாக கலந்து கொண்ட 16 பேரின் லிஸ்ட் லீக்காகியுள்ளது. அதன்படி, முதல் சீசனில் இருந்து ஓவியா, ஜூலி, பரணி, சினேகன், சுஜா வருணி ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. 2வது சீசனில் சரீக், தாடி பாலாஜி, ஐஸ்வர்யா தத்தா ஆகியோரும், 3வது சீசனில் இருந்து  வனிதா, அபிராமி, ஷெரின் ஆகியோரும் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. 4வது சீசனில் பாலாஜி முருகதாஸ், அனிதா சம்பத், சுரேஷ் ஆகியோரும், 5வது சீசனில் கலக்கிய தாமரை, நிரூப், பாவனி ரெட்டி ஆகியோரும் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், ரசிகர்கள் இந்த ஷோவை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR