விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் சில நாட்களுக்கு முன்னர் தொடங்கியது. ஆரம்பித்த சில நாட்களுக்குள்ளாகவே போட்டியாளர்கள் சண்டை போட ஆரம்பித்து விட்டனர். அதற்கு சான்று, நேற்றைய எபிசோட். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிக்பாஸ் சீசன் 7:


பிரபலங்கள் பலர் பங்கேற்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 2017ஆம் ஆண்டு முதல் நடைப்பெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சி தற்போது 7வது சீசனில் அடியெடுத்து வைத்துள்ளது. வழக்கம் போல இந்த சீசனையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். ஒவ்வொரு சீசனும் போட்டியின் விதிமுறைகள் மாற்றப்படும். இந்த முறை பிக்பாஸ் வீடு இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. கேப்டனை பெரிதாக ஈர்க்காத 6 பேரை தேர்ந்தெடுத்து அவர்கள் பிக்பாஸ் இல்லத்திற்குள் அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களே இப்போது இரண்டு வீட்டில் இருப்பவர்களுக்கும் சேர்த்து சமைப்பது, வீட்டை சுத்தம் செய்வது போன்ற வேலைகளை செய்து வருகின்றனர். 


படிப்பு குறித்த வாக்குவாதம்..! 


பிக்பாஸின் இந்த சீசனில் கவனத்தை ஈர்க்கும் வகையில் பல போட்டியாளர்கள் உள்ளனர். இதன் முதல் எபிசோடில் அனைத்து போட்டியாளர்களும் அவரவர் வாழ்க்கை குறித்தும் அவர்களின் தொழில் குறித்தும் பேசிக்கொண்டிருந்தனர். விசித்ரா, தனது சினிமா வாழ்க்கை குறித்து பேசினார். யுகேந்திரன் தனது சினிமா பயணம் குறித்து பேசினார். வனிதாவின் மகன் ஜோவிகா, தான் பள்ளிப்படிப்பை 9ஆம் வகுப்போடு நிறுத்திக் கொண்டதாகவும் அதற்கு மேல் தனக்கு படிப்பு வராததால் நடிப்பில் டிப்ளமோ படித்தாகவும் கூறினார். 


மேலும் படிக்க | பிக்பாஸ் வாய்ஸிற்கு பின்னால் இருக்கும் மர்ம நபர் யார்? அட ‘இந்த’ நடிகரா அது..?


ஜோவிகா தான் பள்ளிப்படிப்பை தொடரவில்லை என்று கூறியதையடுத்து விசித்ரா மற்றும் யுகேந்திரன் ஆகியோர் அவருக்கு “ஒரு டிகிராயவது படிக்க வேண்டும்”  என்று அட்வைஸ் செய்தனர். ஜோவிகா அதற்கு தான் சமயல் கலையை படிக்க உள்ளதாக கூறினார். அதையும் மீறி, அவர்கள் படிப்பு குறித்து பேசினர். ஜோவிகா, “எனக்கு இது குறித்து இனி பேச வேண்டாம்..” என்று கூறினார். ஜோவிகா படிக்காத விஷயம் சமூக வலைதளத்தில் பெரிய விவாதமாக மாறியது. 


காரசாரமான விவாதம்:


இன்றைய எபிசோடின் ப்ரமோ வீடியோ நேற்று வெளியானது. அதில், மீண்டும் ஜோவிகாவின் படிப்பு குறித்து பேசப்பட்டது. நடிகை விசித்ரா 12ஆம் வகுப்பு வரிஅ படிப்பது அவசியம் என்று ஜோவிகாவிடம் பேசுகிறார். ஜோவிகா அதற்கு, அனைவரும் படிச்சுதான் பெரிய ஆள் ஆக வேண்டும் என்ற அவசியம் இல்லை, படிப்பினால் பலர் பாதிக்கப்படவும் செய்கிறார்கள், பலர் தவறான முடிவினையும் எடுக்கிறார்கள் என்று கூறுகிறார். இதற்கு பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ் விசிலடித்தும் கைத்தட்டியும் வரவேற்பு கொடுத்தனர். விசித்ரா, “உன் அம்மா சொல்ல மாட்டாங்களா இதெல்லாம்..” என்று கேட்க, ஜோவிகாவோ, “என் அம்மா சொன்னா நான் கேட்டுக்கிறேன்..” என்று கூறுகிறார். அப்படி பேசுகையில் விசித்ராவை “வா-போ” என்று ஒருமையிலும் பேசுகிறார்.  இதனை ட்ரோல் வீடியோவாகவே பிக்பாஸ் வெளியிட்டுள்ளது. இந்த எபிசோட் நேற்று ஒளிபரப்பானது. 



நெட்டிசன்களின் கருத்து:


பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த ப்ரமோவும் ஜோவிகா மற்றும் விசித்ரா ஆகியோருக்குள் ஏற்பட்ட படிப்பு குறித்த விவாதம் பெரிய பேசு பொருளாக மாறியுள்ளது. ட்விட்டர் எக்ஸ் தளத்தில் நேற்று இரவில் இருந்து #Jovika என்ற ஹேஷ்டேக்கும் #Vichithra என்ற ஹேஷ்டேக்கும் ட்ரெண்டாகி வருகிறது. பலர் ஜோவிகாவின் கருத்திற்கு ஆதரவாக பேச, ஒரு சிலர் “சினிமா துறையில், லைம் லைட்டில் வளர்பவர்களுக்கு படிப்பு அவசியம் இல்லை. ஆனால், பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் இருப்பவர்களுக்கு படிப்புதான் முக்கியம்” என்ற கருத்தும் நிலவி வருகிறது. மேலும், ஜோவிகா ஒருமையில் பேசியதற்கும் கண்டனங்கள் எழுந்துள்ளது. 


மேலும் படிக்க | பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிகம் சம்பளம் வாங்கும் ‘அந்த’ பாேட்டியாளர் யார்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ