Pradeep Antony New Movie Announcement: சில மாதங்களுக்கு முன்பு முடிவு பெற்ற நிகழ்ச்சி, பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சி மூலம் பிரபலானவர் பிரதீப் ஆண்டனி இவர், ஒரு புதுப்படத்தில் கமிட்டாகியிருக்கிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிக்பாஸ் 7-ல் பிரதீப் ஆண்டனி:


அருவி படம் மூலம் அறிமுகமானவர், பிரதீப் ஆண்டனி. இவர், கடந்த ஆண்டு ஆரம்பித்த பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக களமிறங்கினார். ஆரம்பத்தில் நன்றாக விளையாடிக்கொண்டிருந்த இவர், பின்பு மக்களின் கைத்தட்டலை கேட்ட பிறகு கொஞ்சம் முரட்டுத்தனமாக விளையாட ஆரம்பித்தார். ஒரு எபிசாேடில் பிரதீப்பிற்கு எதிராக சக போட்டியாளர்கள் உரிமை குரல் எழுப்ப, அப்படியே ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார். 


பிரதீப்பின் ரெட் கார்டு விவகாரம், மக்களிடையே பூதாகரமாக வெடித்தது. இவர் நடந்து கொண்ட விதம் சரியில்லை என்றாலும், பலர் இவருக்கு எதிராக உரிமை குரல் தூக்கிய பூர்ணிமா, மாயா, நிக்ஸன் உள்ளிட்டோர் மீது பலருக்கு வெறுப்பு எழுந்தது. இதையடுத்து, இவர்களுக்கு எதிரான கருத்துகளும் சமூக வலைதளங்களில் பரவி வந்தது. பிக்பாஸ் முடிந்து பல வாரங்கள் ஆன பிறகும், இது குறித்து இன்னும் பலர் பேசி வருகின்றனர். இந்த சீசன் பிக்பாஸ் 7 போட்டியில், விஜே அர்ச்சனா டைட்டிலை வென்றார். இவர் டைட்டில் வென்றதற்கு காரணம், பிரதீப்பின் ரசிகர்கள்தான் என கூறப்பட்டது. பிரதீப் ஆண்டனியும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டிருந்தார். 


மேலும் படிக்க | தலையை சுற்ற வைக்கும் சீயான் விக்ரமின் சொத்து மதிப்பு.. இத்தனை கோடியா?



புது படத்தில் கமிட் ஆன பிரதீப்..


நடிகர் பிரதீப் ஆண்டனி, புதிதாக ஒரு படத்தில் கமிட் ஆகி உள்ளதாக தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘இந்த வருடம் கொஞ்சம் நடிச்சு காசு சம்பாதிக்கலாம் என முடிவு செய்து அட்வான்ஸ் வாங்கிட்டேன். படம் பொருமையாதான் வரும்..எப்போ வரும்லாம் கேக்காதீங்க..வரும்போது முடிஞ்சா தியேட்டர்ல பாருங்க..’என்று குறிப்பிட்டுள்ளார். 


சம்பளம் எவ்வளவு? 


பிரதீப் ஆண்டனி, தனக்கு அட்வான்ஸாக வழங்கப்பட்ட செக்கை வீீடியோ எடுத்து பதிவிட்டுள்ளார். அந்த காசோலையில் ரூ.9 லட்சம் என எழுதப்பட்டுள்ளது. இவரு முழு சம்பளம், 15 லட்சம் வரை இருக்கலாட் என கூறப்படுகிறது. 


மேலும் படிக்க | ரீ-ரிலீஸ் ஆகிறது ‘96’ திரைப்படம்! எந்த தேதியில் தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ