பிக்பாஸ் 7: யார் இந்த பிரதீப் ஆண்டனி? இவருக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டது ஏன்?

Pradeep Antony Red Card Issue: பிக்பாஸ் 7 போட்டியில் இருந்து ரெட்கார்டு கொடுக்கப்பட்டுள்ள பிரதீப் ஆண்டனி குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் இதோ. 

Written by - Yuvashree | Last Updated : Nov 7, 2023, 05:27 PM IST
  • பிக்பாஸ் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டவர் பிரதீப் ஆண்டனி.
  • இவருக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது.
  • பிரதீப் ஆண்டனி யார்? இவருக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டது ஏன்?
பிக்பாஸ் 7: யார் இந்த பிரதீப் ஆண்டனி? இவருக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டது ஏன்? title=

தமிழகத்தை தாண்டி இந்திய அளவில் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி ட்ரெண்டிங்கிள் உள்ளது. இதற்கு காரணம், அந்த போட்டியில் வலுவான போட்டியாளராக உள்நுழைந்து ரெட் கார்டு வாங்கி வெளியேறிய, பிரதீப் ஆண்டனி. இவர் யார்? (Who Is Pradeep Antony?) இவருக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது ஏன்? என்று தெரியாமல் பிக்பாஸ் பார்க்காத பலர் குழம்பி வருகின்றனர். இவர் குறித்த விவரங்களை இங்கு பார்க்கலாம். 

யார் இந்த பிரதீப் ஆண்டனி? 

பிரதீப் ஆண்டனியை, நாம் அனைவரும் 2016ஆம் ஆண்டு வெளியான ‘அருவி’ படத்தில் பார்த்திருப்போம். இந்த படத்தில் அவர் ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சியில் உதவி இயக்குநராக பணிபுரிபவரின் கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார். இதில் அவரது பெயர் பீட்டர். பயந்த இளைஞராக, அருவியிடம் துப்பாக்கி முனையில் தான் இயக்க இருக்கும் படத்தின் கதையை கூறும் இடத்திலேயே ஆடியன்ஸிடம் க்ளாப்ஸ் வாங்கினார். அதன் பிறகு, உண்மையாகவே அருவியை காதலிக்க ஆரம்பிக்கும் இவர், கடைசியில் அவளுக்கு பிடித்த அனைவரையும் கண்டு பிடித்து அவருடன் நேரம் செலவிடுவார். “ஐ லவ் யூ” என்ற க்ரீட்டிங் கார்டையும் அருவியிடம் வழங்குவார். இந்த படம் அவரை ஓரளவிற்கு பெருமை படுத்தியது. 

பிக்பாஸ் சீசன் 3யில் பிரதீப்:

2019ஆம் ஆண்டு பிக்பாஸ் சீசன் 3 நடந்தது. இதில், பிரதீப்பின் உயிர் நண்பரான கவின் முக்கிய போட்டியாளராக பங்கேற்றிருந்தார். குடும்பங்கள் மற்றும் நண்பர்கள் வரும் எபிசோடில் தனது நண்பனுக்காக பிரதீப் உள்நுழைந்தார். அப்போது கவின் சரியாக கேம் விளையாடவில்லை என்ற காரணத்திற்காக அவரை ‘சப்’பென்று அரைந்தார். இதனால் இவரது முகம் இன்னும் பிரபலமானது. 

‘டாடா’ படத்தில் பிரதீப்:

இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியாக பெரிதும் வெற்றி பெற்ற படம், டாடா. கவின் ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தில் பிரதீப் அவருடன் பணிபுரியும் நண்பராகவும் காமெடி கதாப்பாத்திரத்திலும் நடித்திருப்பார். இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க வைக்க பிரதீப்பைதான் கேட்டதாகவும் இவர்தான் தனது நண்பருக்காக அந்த வாய்ப்பை விட்டுக்கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | பிரதீப் ஆண்டனிக்கு ஆதரவாக களமிறங்கிய பிரபலங்கள்! முடிவு மாறுமா?

பிரதீப்பின் குடும்பம்:

பிரதீப் ஆண்டனியின் குடும்பம் குறித்து (Pradeep Antony Family) அவர் பிக்பாஸிற்கு சென்ற பிறகு சில தகவல்கள் வெளியானது. அதன்படி, சிறுவயதிலயே பிரதீப்பின் தாயும் தந்தையும் இறந்து விட்டதாகவும் தற்போது அவர் தனது சித்தி குடும்பத்துடன்தான் வசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதை பிரதீப் தனது பிக்பாஸ் ஏவியில் கூறியிருந்தார். 

ரெட் கார்டு கொடுக்கப்பட்டது ஏன்? 

பிரதீப், பிக்பாஸ் சீசனில் பலமான போட்டியாளராக இருந்தார். ஆனால் கடந்த வாரம் டாஸ்கின் போது நடந்த ஒரு பிரச்சனையில் இவர் கூல் சுரேஷை மரியாதை குறைவாக பேசினார். இதற்காக உரிமை குரல் எழுப்ப வேண்டும் என்று நினைத்த சில போட்டியாளர்கள் இந்த பிரச்சனை குறித்து தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்த போது “பிரதீப்பால் பெண்களுக்கு பாதுகாப்பில்லை” என்ற குற்றச்சாட்டினை கமல்ஹாசன் முன்னிலையில் வைத்தனர். இதையடுத்து பிக்பாஸ் போட்டியாளர்களிடம் கலந்துரையாடப்பட்ட பிறகு பிரதீப்பிற்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். இதற்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர்களும் பிரதீப்பிற்கு ஆரதரவளித்தனர். இந்த பிரச்சனை பெரும் புயலாக தற்போது உருவெடுத்துள்ளது. 

மேலும் படிக்க | கமலுக்கு உள்குத்துடன் பிறந்தநாள் வாழ்த்து கூறிய பிரதீப்! என்ன சொன்னார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News