ஹிந்தி, தெலுங்கு போன்ற மொழிகளில் பிரபலமானதை போன்றே தமிழிலும் பிரபலமான ஒரு ரியாலிட்டி ஷோவாக ஒளிபரப்பாவது பிக்பாஸ் நிகழ்ச்சி.  பல ஊடகங்களுக்கும், யூடியூபர்களுக்கும், மீமர்களுக்கும் கன்டென்ட் கொடுக்கும் தெய்வமாக இந்த நிகழ்ச்சி விளங்கி வருகிறது.  இதுவரை நடைபெற்று முடிந்த இந்நிகழ்ச்சியின் 5 சீசன்களும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது, முதல் சீசனில் ஆரவ் டைட்டில் வின்னராகவும், இரண்டாவது சீசனில் ரித்விகா டைட்டில் வின்னராகவும், மூன்றாவது சீசனில் முகின் ராவ் டைட்டில் வின்னராகவும், நான்காவது சீசனில் ஆரி டைட்டில் வின்னராகவும், ஐந்தாவது சீசனில் ராஜு ஜெயமோகன் டைட்டில் வின்னராகவும் வெற்றி பெற்றார்கள்.  மற்ற மொழிகளை போலவே தமிழிலும் இந்நிகழ்ச்சிக்கு டிஆர்பி வேற லெவலில் உள்ளது.  வழக்கம்போல பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசனை உலகநாயகன் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கவுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | தனுஷை விட வளர்ந்து விட்டாரா சிவகார்த்திகேயன்? ருசிகர தகவல்!


ஆறாவது சீசன் எப்போது தொடங்கும் என்று எதிர்பார்த்து கொண்டிருந்த நிலையில் தற்போது நிகழ்ச்சி தொடங்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.  அதன்படி வெளியான ப்ரோமோவில் வரும் அக்டோபர் மாதம் 9-ம் தேதி மாலை 6 மணியளவில் பிக்பாஸ்-6 தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  முதல் ஐந்து சீசன்களை காட்டிலும் ஆறாவது சீசனுக்கு வெளியான ப்ரோமோ நன்கு திகிலூட்டும் வகையில் அமைந்து ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.  இன்னும் சில தினங்களில் சமூக வலைத்தளங்களை பிக்பாஸ்-6 நிகழ்ச்சி ஆக்கிரமித்துவிடும், ரசிகர்களும் அவர்களுக்கு பிடித்த போட்டியாளர்களுக்கு ஆர்மி தொடங்கிவிடுவார்கள்.


 



தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி பிக்பாஸ்-6 நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக திவ்யதர்ஷினி, மோனிகா ரிச்சர்ட், ராஜலக்ஷ்மி செந்தில், ஷில்பா மஞ்சுநாத், ரோஷினி ஹரிப்ரியன், தர்ஷா குப்தா, அஷ்வின் குமார், எம்.எஸ்.பாஸ்கர், ரவீந்தர் சந்திரசேகரன், மகாலக்ஷ்மி, மற்றும் மனிஷா யாதவ் ஆகியோரின் பெயர்கள் வெளியாகியுள்ளது.  இருப்பினும் அக்டோபர்-9ம் தேதி பார்த்தால் தான் இதில் யாரெல்லாம் கலந்துகொள்வார்கள் என்பது தெரியும்.  மேலும் பிக்பாஸின் இந்த ஆறாவது சீசனில் முதன்முறையாக பிரபலங்கள் மட்டுமல்லாது சாதாரண மக்களும் கலந்துகொள்ளலாம் என்ற அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | தெலுங்கு மக்களே 'பொன்னியின் செல்வன்’ உங்கள் படம் - சுஹாசினி சர்ச்சை பேச்சு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ