கொரோனா காலத்திலும் சில விஷயங்கள் நம் சிந்தையைக் கவர தவறுவதில்லை. என்னதான் வாழ்க்கையே போராட்டமாகிவிட்ட போதிலும், அந்த போராட்டத்திலும் நம்மை மகிழ்விக்க, நம்மை திசை திருப்ப பல நிகழ்ச்சிகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அப்படி, சமீப நாட்களில் மக்களின் கவனத்தை வெகுவாகக் கவர்ந்துள்ள ஒரு செய்தி, தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் ‘Bigg Boss’ நிகழ்ச்சி பற்றிய செய்தி ஆகும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உலக நாயகன் கமல் (Kamal Haasan) தொகுத்து வழங்கும் Bigg Boss நிகழ்ச்சியின் நான்காவது சீசன் நல்ல வரவேற்பைப் பெற்றது. பிக் பாஸ் தமிழின் நான்காவது சீசன் இந்த வருடத்தின் தொடக்கத்தில் நிறைவடைந்தது. 


பிக் பாசின் ஐந்தாவது சீசன் ஜூன் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், கொரோனாவின் தீவிரம் காரணமாக அது நடக்கவில்லை. சமீபத்திய தகவல்களின் படி, அக்டோபர் மாதம் பிக் பாசின் அடுத்த சீசன் துவங்கலாம் என கூறப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 


ALSO READ: இவருக்கு ஜோடியாகும் ஷிவாணி; வெளியான Proof போட்டோ


பிக் பாஸ் (Bigg Boss) சீசன் 5 பற்றிய புதுப்பிப்புகளுக்காக ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், தற்போது இது குறித்த ஒரு முக்கிய அப்டேட் வந்துள்ளது. பிக் பாஸ் சீசன் 5-ன் லோகோ இன்று மாலை வெளியாகவுள்ளது. இந்த செய்தி வந்ததிலிருந்து சமூக ஊடகங்களில் ரசிகர்கள் இதைப் பற்றி அதிகம் பேசி, பகிர்ந்து வருகின்றனர். 


இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பும் தனியார் தொலைக்காட்சி, இன்று மாலை, இந்த லோகோவை அதிகாரப்பூர்வமாக வெளியிடவுள்ளது.  இது குறித்த குறிப்பு ட்விட்டரில் பதிவிடப் பட்டுள்ளது. 


லோகோ வரவுள்ள நிலையில், அடுத்த பிக் பாஸ் சீசனின் ப்ரோமோ எப்போது வரும் என்ற ஆவல் ரசிகர்களிடம் அலை மோதுகிறது.


இதற்கிடையில், பிக் பாஸ் சீசன் 5-க்கான (Bigg Boss Season 5) போட்டியாளர்களை முடிவு செய்வதற்கான இறுதி கட்ட பணிகள் நடந்துகொண்டிருப்பதாகவும் கூறப்படுகின்றது. இந்த முறை பிக் பாஸ் போட்டியாளர்களில் இரண்டு திருநங்கைகளும் இருக்கக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. கனி திரு, சுனிதா கோகோய், ஜி.பி. முத்து ஆகியோரும் இந்த சீசனில் இடம்பெறலாம்.


மேலும் ப்ரொமோ எப்போது வரப்போகிறது என ரசிகர்கள் இன்னும் ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.


ALSO READ: 4 மட்டுமல்ல, 40 முறை திருமணம் செய்து கொள்ள தைரியம் இருக்கிறது: நடிகை வனிதா


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR