4 மட்டுமல்ல, 40 முறை திருமணம் செய்து கொள்ள தைரியம் இருக்கிறது: நடிகை வனிதா

Actress Vanitha News: பெண்களுக்கு தனக்கான துணை தேர்ந்தெடுக்க சுதந்திரம் வேணும். ஆண்கள் 2, 3 திருமணம் செய்துக்கொண்டால், யாரும் கேள்வி கேட்பதில்லை. ஆனால் ஒரு பெண் அப்படி செய்தால், அது தவறாக சித்தரிக்கப்படுகிறது. 

Written by - ZEE Bureau | Last Updated : Jul 24, 2021, 03:01 PM IST
  • பெண்களுக்கு தனக்கான துணை தேர்ந்தெடுக்க சுதந்திரம் வேணும்.
  • யாருடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேச வேண்டாம்.
  • 4 மட்டுமல்ல, எனக்கு 40 முறை திருமணம் செய்து கொள்ள தைரியம் இருக்கிறது.
4 மட்டுமல்ல, 40 முறை திருமணம் செய்து கொள்ள தைரியம் இருக்கிறது: நடிகை வனிதா

Actress Vanitha News: பிரபல நடிகை வனிதா விஜய்குமார் குறித்த செய்தி எப்பவுமே பரபரப்பாக இருக்கும். பிக் பாஸ் தமிழ் சீசன் 3 மூலம் மீண்டும் புகழ் பெற்றார். இதனையடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய "பிக்பாஸ் தமிழ்" நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களை கொண்டு "பிக் பாஸ் ஜோடிகள்" (BB Jodigal) என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர்கள் பலரும் கலந்துக்கொள்கின்றனர். அந்த நிகழ்ச்சியில் பங்கு பங்கேற்றிருந்த நடிகை வனிதா விஜய்குமார் விலகியதால், தலைப்புச் செய்திகளில் அவரது பெயர் இடம்பெற்றது. 

இதனையடுத்து சமூக ஊடகம் மூலம் ஏன் நிகழ்ச்சியிலிருந்து விலக முடிவு செய்தார் என்பதுக் குறித்து விளக்கம் அளித்தார். அதாவது அந்த நிகழ்ச்சியில் தீர்ப்புகள் வழங்கப்படும் விதம் தனக்கு பிடிக்கவில்லை என்றும், அனைத்து போட்டியாளர்களை சமமாக ஒப்பிட்டு, ஆக்கபூர்வமான விமர்சனங்கள் கொடுக்கப்படும்போது, நான் அதை ஏற்றுக்கொள்வேன், ஆனால் அங்கு நடந்தது அப்படி இல்லை எனக் கூறினார்.

இதற்கிடையில், சமீபத்தில், நகைச்சுவை நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசனுடன் மாலையும் கழுத்துமாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துகொண்டு தனது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலானதை அடுத்து, வனிதா மீண்டும் திருமணம் செய்துக்கொண்டார் என செய்திகள் வெளியாகின. அதன்பிறகு, அந்த புகைப்படம் "பிக்கப் டிராப்" (Pickup Drop) என்ற படத்திற்காக அவர் பவர்ஸ்டாருடன் இணைந்து நடிக்கவுள்ள படத்தின் ஸ்டில்ஸ் எனத் தெரிய வந்துள்ளது. 

ALSO READ | வனிதா விஜயகுமார் 4வது திருமணம்; பவர் ஸ்டார் புதிய கணவரா: வைரலாகும் புகைப்படம்

சமீபத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய நடிகை வனிதா விஜய்குமார், முக்கியமாக பெண்கள் அதிகாரம் குறித்து பேசினார். பெண்கள் அடிமையாக தான் இருக்க வேண்டும் நினைக்கிறார்கள். பெண்களுக்கு தனக்கான துணை தேர்ந்தெடுக்க சுதந்திரம் வேணும். ஆண்கள் 2, 3 திருமணம் செய்துக்கொண்டால், யாரும் கேள்வி கேட்பதில்லை. ஆனால் ஒரு பெண் அப்படி செய்தால், அது தவறாக சித்தரிக்கப்படுகிறது. யாருடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேச வேண்டாம் என்று அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என்றார். சில சமயங்களில் இதுபோன்ற செயல்கள் ஒருவரின் தற்கொலைக்கு வழிவகுக்கிறது எனவும் கூறினார். 

ஒருவர் தனியாக இருக்கலாமா அல்லது கல்யாணம் பண்ணிக்கலாமா என்பது அவரவரின் தனிப்பட்ட விருப்பம். அதில் யாரும் தலையிடக்கூடாது. வனிதாவுக்கு நான்காவது முறையாக கல்யாணம், 40 வயதில் இது தேவையா? இதுபோன்ற தேவையில்லாதா விசியங்களை தவிர்த்து, நல்ல விசியங்களை பேசுங்கள் எனக் கேட்டுக்கொண்டார். மேலும் 4 மட்டுமல்ல, எனக்கு 40 முறை திருமணம் செய்து கொள்ள தைரியம் கூட இருக்கிறது. ஆனால் ஒருவருடைய தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிய கருத்துகளை சொல்வதை புறக்கணியுங்கள் என்றும் கூறினார். 

ALSO READ | மீண்டும் காதலில் சிக்கிக்கொண்டாரா வனிதா விஜயகுமார்?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

More Stories

Trending News