பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கி கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. கடந்த சீசன் அதிக சர்ச்சைகளும், தொடர் சண்டைகளும் கொண்ட ஒன்றாக இருந்தது. அதேபோல தற்போது பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பல சர்ச்சைகளும், சண்டைகளும் வெடித்துள்ளது. கடந்த ஆறு சீசன்களாக பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் கமல்ஹாசன் இந்த ஏழாவது சீசனையும் தொகுத்து வழங்கி வருகிறார்.  கடந்த சீசர்களைப் போலவே இந்த வருடமும் விஜய் டிவி பிரபலங்கள் பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர். பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பல மாற்றங்களை செய்துள்ளனர். இது ரசிகர்களிடையே நிகழ்ச்சி மீது அதிக எதிர்பார்ப்பை தூண்டும் விதமாக உள்ளது.  18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் இதுவரை நடந்த எவிக்ஷனில் அனன்யா, விஜய் வர்மா, யுகேந்திரன், வினுஷா தேவி ஆகியோர் வெளியேறினர். மேலும், பவா செல்லத்துரை அவராகவே நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | அனிருத்தை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்! ஏன் தெரியுமா?


இரண்டு வாரங்களுக்கு முன்பு வைல்டு கார்ட் போட்டியாளர்களாக 5 பேர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றனர்.  இதன் பின்பு தான் ஆட்டம் சூடு பிடிக்க ஆரம்பித்தது.  மாயா மற்றும் பூர்ணிமா இருவரும் இணைந்து பிரதீப் ஆண்டனியை எப்படியாவது வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று காத்துக் கொண்டிருந்தனர். அதற்கு ஏற்றார் போல பிரதீப் மற்றும் கூல் சுரேஷ் இடையே மிகப் பெரிய பிரச்சனை ஏற்பட்டது. பிரதீப் சுரேஷின் அம்மாவை பற்றி தகாத முறையில் பேசியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.  மேலும், பெண்களுக்கு வீட்டில் பாதுகாப்பு இல்லை என்றும் உரிமைக்குரல் எழுப்பினர் சில பிக்பாஸ் போட்டியாளர்கள்.  மேலும், வீட்டில் பிரதீப் அடிக்கடி கேட்ட வார்த்தை பேசுவதாகவும் போட்டியாளர்கள் சிலர் பிரதீப்பிற்கு எதிராக கமல்ஹாசனிடம் முறையிட்டனர்.




பின்பு யாரும் எதிர்பார்க்காத வகையில் பிரதீப்பிற்கு ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றினார் கமல். இது ரசிகர்கள் மற்றும் பிரதீப் ஆதரவாளர்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பலரும் பிரதீப்பிற்கு ஆதரவாக தற்போது களமிறங்கியுள்ளனர், மேலும் இது குறித்த பல விவாதங்களும் சமூக வலைத்தளங்களில் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி வெற்றியாளரான அசீம் பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்ட் கொடுத்தது பற்றி பேசி உள்ளார். சமீபத்திய நேர்காணலில் பேசிய அசீம், " இது போன்ற செயல்களில் மீண்டும் ஈடுபட வேண்டாம் என்று கமல்ஹாசன் அவர்கள் சொல்லி இருக்கலாம்.  ஆனால், பிரதீப்க்கு ரெட் கார்ட் கொடுத்ததை நான் Fair ஆக பார்க்கவில்லை.  குறிப்பாக பெண்கள் பாதுகாப்பிற்காக கொடுத்தது தவறு, பிரதீப்க்கு இன்னொரு வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்க வேண்டும்" என்று சமீபத்திய நேர்காணலில் பேசி உள்ளார்.


மேலும் படிக்க | லியோ படத்தில் மட்டுமல்ல..‘இந்த’ தமிழ் படங்களிலும் பொய்யான Flash Backதான் கதை..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ