லோகேஷ் கனகராஜ்-விஜய் இரண்டாம் முறையாக கூட்டணி வைத்துக்கொண்ட படம், லியோ. இந்த படத்தில் தமிழ் திரையுலகை சேர்ந்த நட்சத்திரங்கள் பலர் முக்கிய கதாப்பாத்திரங்களிலும் காமியோ கதாப்பாத்திரங்களிலும் நடித்திருந்தனர். இப்படத்தில் இடம் பெற்றிருந்த ஃப்ளாஷ் பேக் கதையை லோகேஷ் கனகராஜ் சில நாட்களுக்கு முன்னர் பொய் என்று கூறிவிட்டார். இதனால் ரசிகர்கள் அதிர்ந்து போயினர்.
லியோ திரைப்படம்:
‘மாஸ்டர்’ படத்திற்கு பிறகு, லோகேஷ் கனகராஜ் விஜய்யுடன் கைக்காேர்த்த படம், லியோ. கைதி, விக்ரம் என ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த இயக்குநரின் படம் என்பதால் லியோ மீது ரசிகர்களுக்கு அதீத எதிர்பார்ப்பு எழுந்தது. இப்படம், கடந்த மாதம் 19ஆம் தேதி வெளியானது. இதில் நடிகர் விஜய்யின் நடிப்பிற்கு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகள் கிடைத்தாலும் லோகேஷ் கனகராஜ்ஜின் திரைக்கதைக்கு நல்ல விமர்சனம் கிடைக்கவில்லை.
பொய்யான ஃப்ளாஷ் பேக்:
லியோ படத்தின் முதல் பாதியில் விஜய்யை ‘பார்த்திபன்’ என்ற கதாப்பாத்திரத்தில் காண்பித்திருப்பர். இவரை லியோ என நினைத்து பலர் கொல்லுவதற்காக துரத்துவர். படத்தின் முதல் பாதிக்கு பிறகு, மன்சூர் அலிகான் லியோ யார்? அவனுக்கு என்ன ஆனது என்பது குறித்த 20 நிமிட கதை ஒன்றை கூறுவார்.
லோகேஷ் கனகராஜ் கொடுத்த அதிர்ச்சி..
லியோ படத்தில் மன்சூர் அலிகான் கூறிய கதை, பொய்யாக இருக்கலாம் என ரசிகர்கர்கள் பலர் கருதினர். படத்தின் ரிலீஸிற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் ஒரு நேர்காணலில் கலந்து கொண்டார். அப்போது லியோ படத்தில் இடம் பெற்றுள்ள ஃப்ளாஷ் பேக் பொய்யா என்பது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர், மன்சூர் அலிகான் அந்த கதையை கூறுவதற்கு முன்னர் “எல்லோருக்கும் ஒவ்வொரு ஃப்ளாஷ் பேக்..இது என்னோட ஃப்ளாஷ் பேக்..” என்று கூறுவார். இதை எடிட் செய்து விட்டதாக அவர் கூறியிருந்தார். படத்தில் முக்கிய திருப்பமாக இருந்த ஃப்ளாஷ் பேக்கே பொய் என தெரிந்த ரசிகர்கள் அதிர்ந்து போயினர்.
மேலும் படிக்க | ‘லியோ’ படத்தில் நடிக்க பிரியா ஆனந்த வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
பொய் ஃப்ளாஷ் பேக் உடைய படங்கள்..
வாலி: 1999ஆம் ஆண்டு வெளியான ‘வாலி’ படத்தில் அஜித்குமார் இரண்டு வேடங்களில் நடித்திருப்பார். இதில் சிம்ரனை காதலிக்கும் அவர், அவரை காதலிக்க வைப்பதற்காக தான் ஒரு பெண்ணை காதலித்ததாகவும் அந்த காதல் தாேல்வியில் முடிந்ததாகவும் பாெய்யான ஒரு கதாப்பாத்திரத்தை உருவாக்கி கதை சொல்வார். இதுவும் தமிழ் சினிமாவில் வந்த பொய்யான பின்கதைகளுள் ஒன்று.
மன்மதன்: 2004ஆம் ஆண்டு வெளியான மன்மதன் படத்தில் சிம்பு, தன்னுடைய தம்பி ‘மொட்டை’ மதன் தன் காதலியால் ஏமாற்றப்பட்டதால் இப்போது பெண்களை கொலை செய்து வருவதாக போலீஸாரிடம் கூறியிருப்பார். ஆனால் உண்மையில் அவர் தனது அண்ணனின் கண் முன்பே தற்கொலை செய்து கொள்வோர். தான் செய்த கொலைகளில் இருந்து தப்பித்து கொள்வதற்காக அவர் இவ்வாறு பொய்யான ஃப்ளாஷ் பேக்கை கூறி தப்பித்து விடுவார்.
பீட்ஸா: 2012ஆம் ஆண்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான படம் ‘பீட்ஸா’. இதில் விஜய் சேதுபதி தான் வைரத்தை திருடியதை மறைப்பதற்காக ஒரு பொய் பேய் கதையை கூறுவார். தான் பீட்ஸா டெலிவரி செய்யப்போன வீட்டில் பேய் இருந்ததாகவும் அங்கு தான் கொண்டு போன பையை விட்டுவிட்டு வந்து விட்டதாகவும் கூறுவார். இது பொய் கதை என்பதே கடைசியில்தான் தெரியும்.
மேலும் படிக்க | ‘லியோ’ படத்தில் நடிக்க விஜய் வாங்கிய சம்பளம் எவ்வளவு? முழு விவரம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ