100 நாட்கள், 60 கேமராக்கள், 20 போட்டியாளர்கள்…ஒரே வீட்டில் இதுதான் இதுவரை பிக்பாஸ் இல்லத்தின் ரூல்ஸாக இருந்தது. இந்த முறை அந்த விதிமுறைகளை கொஞ்சம் மாற்றி அமைத்துள்ளது, பிக்பாஸ் நிகழ்ச்சி. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிக்பாஸ்:


‘பிக் பிரதர்’ என்ற வெளிநாட்டு நிகழ்ச்சி போலவே இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்ச்சி பிக்பாஸ். இந்தி திரையுலகில் இந்த நிகழ்ச்சி பல ஆண்டுகளாக ஒளிபரப்பாக வருகிறது. பிரபல நடிகர் சல்மான் கான் இந்நிகழ்ச்சிக்கு தொகுப்பாகளராக உள்ளார். தமிழை பொருத்தவரை பிக்பாஸ் கடந்த 2017ஆம் ஆண்டு தாெடங்கப்பட்டது. 


போட்டியின் விதிமுறை:


பிக்பாஸ் இல்லத்தில் நுழைவதற்காக 20 போட்டியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அந்த 20 பேரும் பெரும்பாலும் திரைத்துறையை சேர்ந்த பிரபலங்களாக இருப்பார்கள். அவர்கள் அனைவரும் 100 நாட்கள் ஒரே வீட்டில் தங்க வேண்டும். இவர்களை 60 கேமராக்கள் கண்காணித்து கொண்டே இருக்கும். அவர்களுக்கென்று கொடுக்கப்படும் மைக்கை எப்போதும் போட்டுக்கொள்ள வேண்டும். வீட்டு வேலைகளை பகிர்ந்து செய்ய வேண்டும். வாரா வாரம் ஒவ்வாெருவராக வெளியேற்றப்படுவர். இவர்கள் யாரை வெளியேற்ற போகிறோம் என்பதை அவர்களுக்குள் கலந்தாலோசிக்க கூடாது. பகலில் தூங்க கூடாது, கொடுக்கப்படும் டாஸ்கை ஒழுங்காக செய்ய வேண்டும். இது போல இன்னும் வெளியில் சொல்லப்படாத பல விதிமுறைகள் இந்த நிகழ்ச்சியில் அடங்கியிருக்கிறது. 


மேலும் படிக்க | Trisha: ஸ்வீடன் பயணத்தில் ஸ்வீட் செல்ஃபி எடுத்த த்ரிஷா! வைரலாகும் புகைப்படம்!


இந்த முறை இரண்டு வீடு..!


பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரமாே நேற்று வெளியானது. இதில் கமல், இரு வேடங்களில் நடித்திருந்தார். வழக்கமான ப்ரமாே வீடியோக்களை போலவே, இந்த வீடியோவிலும் ஒரு கமல் நிகழ்ச்சி எப்படி இருக்கப்போகிறது என்று கூறினார். அவரை இடைமறித்து பேசும் இன்னொரு கமல் “எல்லாம் தெரிஞ்ச விஷயம்தானே..” என்பது போல பேசுகிறார். 



“100 நாட்கள், 60 கேமராக்கள், 20 போட்டியாளர்கள்..” என்று ஒரு கமல் கூற, இன்னொருவர், “ஒரு வீடு, அதானே..” என்கிறார். அதற்கு இன்னொரு கமல், “அதான் இல்ல. இந்த முறை இரண்டு வீடு” என்கிறார். 


“சும்மாவே வீடு ரெண்டாகும்..”


பிக்பாஸ் இல்லத்தை பொருத்தவரை, கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் அனுமதியின்றி வெளியில் செல்ல முடியாது. ஆதலால் ஒரே இடத்தில் வெவ்வேறு ரசனைகள் மற்றும் சிந்தனைகள் உடையோர் மாட்டிக்கொண்டது போல இருக்கும். இதனால் சண்டை சச்சரவுகளுக்கு பஞ்சமே இருக்காது. போதாக்குறைக்கு குழுக்களாக வேறு சிலர் பிரிந்து கொள்வர். இதனால் வீடே இரண்டு படும். இந்த முறை வீடே இரண்டாக மாற உள்ளதால் என்ன மாற உள்ளதாக என்னென்ன கூத்து நடக்குமோ என ரசிகர்கள் ஆர்வமாக இந்நிகழ்ச்சிக்காக காத்துக்காெண்டுள்ளனர். 


இதுவரை வெற்றி பெற்ற போட்டியாளர்கள்..


பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில், நடிகர் ஆரவ் வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டார். இரண்டாவது சீசனில் நடிகை ரித்விகா வெற்றி கண்டார். மூன்றாவது சீசனில் கடும் போட்டி நிலவினாலும், இறுதியில் பாடகர் முகேன் ராவ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். இருப்பதிலேயே 4வது பிக்பாஸ் சீசன்தான் பலருக்கும் புது அனுபவத்தை தந்தது. இதில், ஆரி வெற்றி பெற்றார். 5வது சீசன் முந்தைய சீசன்கள் அளவிற்கு வரவேற்பினை பெறவில்லை. இருப்பினும் மக்கள் மனங்களில் சின்னத்திரை பிரபலம், ராஜு இடத்தை பிடித்து விட்டார். இவரே அந்த சீசனின் வெற்றியாளராகவும் ஆனார். நடந்து முடிந்த 6வது சீசனின் வெற்றியாளர் அசீம். இவருக்கும் சக போட்டியாளர் விக்ரமனிற்கும் கடும் போட்டி நிலவியது. பலர் விக்ரமன் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்த்த நிலையில், அசீம் வெற்றியாளர் பட்டத்தை தட்டிச்சென்றார். 


மேலும் படிக்க | சந்தானத்தின் அதகள காமெடியில் ZEE5 இல் சிரிக்க வைக்க வரும்  ‘டி.டி.ரிட்டர்ன்ஸ்’


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ