பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக உள்ளவர் நடிகை விசித்ரா. 2000 கால கட்டங்களில் மிகவும் புகழ்பெற்ற நடிகையாக இருந்த இவர் திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார். பல நாட்களாக சினிமா மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இருந்து விலகி இருந்த விசித்திரா தற்போது பிக் பாஸில் மக்கள் மத்தியில் நல்ல ஒரு பெயரை பெற்று வருகிறார். இந்நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் உங்கள் வாழ்க்கையில் நடந்த பூதாகரமான செய்திகளை பற்றி பேசுமாறு கூறப்பட்டிருந்தது, அப்போது நடிகை விசித்திரா தனக்கு 20 ஆண்டுகளுக்கு முன் பட ஷூட்டிங் ஒன்றில் நடந்த நிகழ்வை பகிர்ந்து கொண்டார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | Bigg Boss Tamil 7: பிக்பாஸில் இருந்து வெளி வந்த கானா பாலாவிற்கு எவ்வளவு செட்டில்மெண்ட் ஆச்சு?


அதில் ஒரு படப்பிடிப்பு தளத்தில் அந்த படத்தின் ஹீரோ தன்னை பார்த்ததும் இரவு தன்னுடைய அறைக்கு வருமாறு அழைத்ததாகவும், ஆனால் விசித்திரா அங்கு செல்லாமல் தனது அறையிலேயே இருந்ததாகவும், இதனால் அவருக்கு ஏற்பட்ட தர்ம சங்கடங்களை பற்றி பேசியுள்ளார். அதில், அவருக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவு, காஸ்டிங் கவுச் என்று சொல்லப்படுவது போல் அவர் தங்கி இருந்த அறைக்கு வந்து தினமும் இரவு கதவை தட்டி அவரை பாலியல் ரீதியாக அழைத்தது பற்றி கூறியுள்ளார்.  


படப்பிடிப்பின் போதே தன் மீது தவறாக நடந்து கொண்ட ஸ்டண்ட் மாஸ்டரை கையும் களவுமாக பிடித்தும் அவமானமும், கன்னத்தில் அறை மட்டுமே கிடைத்தது என்றார். இது பற்றி காவல்துறையில் புகார் அளித்தும், சினிமா துறையினர், யூனியன் என்று யாரும் உதவிக்கு வராததால், தான் திரையுலகை விட்டே விலகியதாக கூறினார் விசித்திரா.  இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் விசித்ரா யாரை குறிப்பிட்டார் மற்றும் எந்த படத்தை பற்றி கூறினார் என்று பதிவிட்டு வருகின்றனர். 2001 ஆம் ஆண்டு நந்தமுரி பாலகிருஷ்ணா நடித்த Bhalevadivi Basu படத்தின் படப்பிடிப்பின் போது தான் இந்த சம்பவங்கள் நடந்துள்ளது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.  



மற்ற வருடங்களை விட இந்த வருட பிக்பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் சுவாரசியம் அதிகம் ஆகி கொண்டே செல்கிறது.  இந்த வாரம் பிக்பாஸ் கொடுக்கும் 3 பூகம்பம் டாஸ்க்கில் பிக்பாஸ் வீட்டார் தோல்வி அடைந்தால், கடந்த வாரங்களில் வீட்டில் இருந்து வெளியே சென்ற நபர்கள் மீண்டும் வீட்டிற்குள் வரலாம் என்று கூறப்பட்டுள்ளது.  மேலும், எத்தனை பேர் வருகிறார்களோ அத்தனை பேர் வெளியேற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதனால் தற்போது பிக்பாஸ் வீட்டில் உள்ள நபர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.  ஏற்கனவே முதல் டாஸ்கில் தோல்வி அடைந்த நிலையில், அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பயத்தில் உள்ளனர்.  சில வாரங்களுக்கு முன்னர் 5 பேர் வைல்ட் கார்ட் என்ட்ரியில் வீட்டிற்குள் நுழைந்த நிலையில், தற்போது மேலும் சிலர் பிக்பாஸ் வீட்டிற்குள் வர இருப்பது மேலும் சுவாரஸ்யத்தை கூட்டி உள்ளது.


மேலும் படிக்க | மன்சூர் அலிகானுக்கு செக் வைத்த தேசிய மகளிர் ஆணையம்-தாமாக முன் வந்து வழக்கு பதிவு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ