ஒருவழியாக அமீருக்கு க்ரீன் சிக்னல் கொடுத்த பாவனி...ரசிகர்கள் மகிழ்ச்சி!
அமீர் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்தும் தனது காதலை வெளிப்படுத்தும் விதமாகவும் பாவனி இன்ஸ்டாகிராமில் புகைப்படம் மற்றும் ரைட்டப் ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனிலும் ஒரு ஜோடி காதலிக்க தொடங்கிவிடும். முதல் சீசனில் ஆரவ்-ஓவியா, இரண்டாவது சீசனில் ஷாரிக்-ஐஸ்வர்யா, மஹத்-யாஷிகா, 3வது சீசனில் கவின்-அபிராமி, சாக்ஷி, லாஸ்லியா, முகின் ராவ்-அபிராமி, தர்ஷன்-ஷெரின், 4-வது சீசனில் பாலாஜி-ஷிவானி என்று பல ஜோடிகள் கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் இவர்கள் யாரும் நிகழ்ச்சிக்கு பின்னர் ஒன்றாக வெளியில் இருக்கவில்லை, பிக்பாஸ் சீசன்-5ல் பங்கேற்ற அமீர்-பாவனி ஜோடி நிகழ்ச்சிக்கு பின்னரும் ஒன்றாக இருந்து வருகின்றனர். மற்ற ஜோடிகளை விட அமீர்-பாவனி ஜோடி பலருக்கும் ஃபேவரைட், அதற்கு காரணம் அமீர் பாவனி மீது காட்டும் அதீத அன்பும் அக்கறையும் தான். கணவரை இழந்த பாவனி - குடும்பத்தை இழந்த அமீர் இருவரும் ஒன்று சேரவேண்டும் என்று ரசிகர்கள் பலரும் ஆசைப்பட்டனர்.
மேலும் படிக்க | நடிகர் விஜய் மீதான வழக்கை முடித்து வைத்தது சென்னை உயர்நீதிமன்றம்!
நிகழ்ச்சியில் பாவனிக்கு அமீர் முத்தம் கொடுத்தது பெரிய சர்ச்சையாக பேசப்பட்டது, ஆனால் பின்னர் அமீர், பாவனி மீது காட்டிய அக்கறை அதனை மறக்க செய்தது. நிகழ்ச்சியை முடிந்த பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிபி ஜோடிகள்-2 நிகழ்ச்சியில் அமீர் - பாவனி கலந்துகொண்டு பட்டையை கிளப்பி வருகின்றனர். இவர்கள் இருவரும் நடன பயிற்சி செய்யும் காட்சிகள் சில அவ்வப்போது வெளியாகி, ரசிகர்களை உற்சாகப்படுத்தும். இந்த நடன நிகழ்ச்சியிலும் இவர்கள் இருவருக்குள்ளும் இருக்கு கெமிஸ்ட்ரி பலராலும் ரசிக்கப்படுகிறது, அடிக்கடி இந்த ஜோடி வெளியில் செல்லும் புகைப்படங்கள் சிலவும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் அமீரின் பிறந்தநாளுக்கு பாவனி இன்ஸ்டாகிராமில் போட்டிருக்கும் ரைட்டப் பலரையும் ரசிக்க வைத்துள்ளது.
அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அமீரை கட்டிப்பிடித்துக்கொண்டு இருக்கும் ஒரு க்யூட்டான புகைப்படத்தை பகிர்ந்து அதில் சிலவற்றை எழுதியுள்ளார். அதில், அடுத்தவரின் வாழ்க்கையில் மகிழ்ச்சியை நிரப்பும், அடுத்தவருக்கு நல்லதையே செய்யும் உன்னை போன்ற ஒரு மனிதன் எனது வாழ்வில் கிடைத்ததை நினைக்கும்போது நான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன். உன்னிடமிருந்து நான் பெற்ற அதிக அக்கறையும், அன்பும் உனக்கு இந்த பூமியில் எல்லாவற்றிலும் இருந்து நிச்சயம் கிடைக்கும் என்று நான் நம்புகிறேன். எனது நல்லதிலும், கேட்டதிலும் பங்கேற்ற உனக்கு எனது நன்றிகள், உன்னை போன்ற தங்கமான மனிதருக்கு நான் நிறைய சொல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். லவ் யூ டா, ஹேப்பி பர்த்டே! என்று மனமுருக பதிவிட்டுள்ளார்.
இந்த உணர்வுபூர்வமான ரைட்டப் மற்றும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அமீருக்கு, பாவனி பச்சைக்கொடி காட்டிவிட்டார் என்று மகிழ்ச்சியில் இருந்து வருகின்றனர். அமீருடன் இருக்கும் சில புகைப்படங்களையும் பாவனி அவரது இன்ஸ்டாகிராம் பக்க ஸ்டோரியில் பகிர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்.
மேலும் படிக்க | இதற்காகத்தான் நிர்வாணமாக நடித்தேன் - பவி டீச்சர் ஓபன் டாக்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ