பிரபல நடிகர் மற்றும் நடிகைகளின் படங்கள் வெளியாகும்போது ரசிகர்கள் வழக்கமாக கட்அவுட் வைப்பார்கள். அதற்கு பாலாபிஷேகம் செய்து, ராட்சத மாலையை அணிவிப்பார்கள். கவனம் ஈர்ப்பதற்காக அவர்கள் அந்த கட்அவுட்டுகளில் வித்தியாசமாக இருக்கும் வேண்டும் என்பதற்காக சில வேடிக்கையான விஷயங்களையும் செய்துவிடுவார்கள். இது சமூகவலைதளங்களில் வைரலாகும். அந்த வகையில் கீர்த்தி சுரேஷ் ரசிகர்கள் செய்துள்ள அலப்பறை நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | விக்ரம் படத்தில் சூர்யா கேரக்டர் குறித்து லீக்கான தகவல்


தெலுங்கில் மகேஷ்பாபு மற்றும் கிரீத்தி சுரேஷ்  நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் ‘சர்காரு வாரி பாட்டா’. மிகப்பெரிய எதிர்பார்க்கு இடையே வெளியான இப்படத்தில் முக்கிய ரோலில் சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். முதல் காட்சியைப் பார்த்த ரசிகர்கள் எழுதியுள்ள டிவிட்டர் விமர்சனங்களில், மிகப்பெரிய ஏமாற்றம் என படத்தை விமர்சித்துள்ளனர். நல்லநல்ல படங்களை தேர்வு செய்து நடிக்கும் மகேஷ் பாபு எப்படி இந்தக் கதையை தேர்வு செய்தார் என்றும் வினவியுள்ளனர்.



கீதா கோவிந்தம் போன்று வெற்றிப்படத்தை இயக்கிய இயக்குநர் பராசுரம், இந்தப் படத்தை ஜாலியாக எடுப்பார் என எதிர்பார்த்த நிலையில் மோசமாக எடுத்திருப்பதாகவும் கூறியுள்ளனர். இந்த விமர்சனங்களுக்கு நடுவே கவனம் ஈர்த்துள்ளது கீர்த்தி சுரேஷூக்கு வைத்த கட்அவுட். டிவிட்டர் பேன்ஸ் என்ற தலைப்புடன் சுரேஷூக்கு வைக்கப்பட்ட கட்அவுட்டில் ரசிர்கள் அனைவரும் தங்கள் பெயருக்கு பின்னால் கீர்த்தி என்ற பெயரை அடைமொழியாக சேர்த்துக் கொண்டனர். 



அவர்கள் தங்கள் பெயருக்குப் பின்னால் கீர்த்தியின் பெயரை சேர்த்தது தான் இப்போது ஹைலைட்டாக மாறியுள்ளது. படத்தை விமர்சிக்கும் நெட்டிசன்கள் கூட கீர்த்திக்காக வைக்கப்பட்ட இந்த கட்அவுட்டின் புகைப்படத்தை பார்த்து வயிறு குலுங்க சிரிக்கத் தொடங்கியுள்ளனர். அந்த கட்அவுட்டில் இருக்கும் ரசிகர்களின் பெயர்கள் அனைத்தும் Venkat Keerthy, Sai Keerthy, Sana Keerthy, Mani Keerthy எழுதி வைத்துள்ளனர். இந்தப் புகைப்படம் தற்போது டிவிட்டரில் வைரலாகியுள்ளது. 


மேலும் படிக்க | புது கார் வாங்கிய விஜய் டிவி நாஞ்சில் விஜயன் - விலை எவ்வளவு தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR